இன்று சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. ஜிம்பாப்வே அணியின் வலது கை வேகப்பந்துவீச்சாளர் பிளஸ்ஸிங் முஸரபானி இந்திய அணி குறித்து பேசி இருக்கிறார்.இன்று சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. ஜிம்பாப்வே அணியின் வலது கை வேகப்பந்துவீச்சாளர் பிளஸ்ஸிங் முஸரபானி இந்திய அணி குறித்து பேசி இருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதற்கு அடுத்து நடப்புச் சாம்பியன் என்கின்ற அடையாளத்தோடு இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே நாட்டில் அந்த அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இன்று ஜூலை 6 ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதற்கு அடுத்து ஜூலை 7, 10, 13, 14 ஆகிய தேதிகளில் தொடர் நடைபெற்று முடிவுக்கு வருகிறது. மேலும் இந்த தொடரில் எல்லா போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்குகிறது. மேலும் இந்த போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் பார்க்கலாம்.
இந்த நிலையில் ஜிம்பாவே அணியின் நட்சத்திர வலதுகை வேகப் பந்துவீச்சாளர் பிளஸ்ஸிங் முஸரபானி இந்த தொடருக்கான அவரது பந்து வீச்சு திட்டம் குறித்தும், இந்திய அணி குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன் யார் என்று தான் பார்க்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பிளஸ்ஸிங் முஸரபானி பேசும்பொழுது ” அனேகமாக நான் மற்ற பந்துவீச்சாளர்களை விட சற்று வித்தியாசமாக இருப்பதாக நினைக்கிறேன். மேலும் கில் சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்கனவே நிறைய செயல்பட்டு இருப்பதால் அவருக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். அவர் உண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய பெயர். ஆனால் ஒவ்வொருவரையும் விக்கெட் ஆகவே பார்க்கிறேன். இதனால் தனிப்பட்ட முறையில் எந்த வீரரையும் பார்ப்பதில்லை.
இதையும் படிங்க : பும்ரா பாய் தினமும் காலையில இதை எனக்கு சொல்லுவார்.. அவர் கூட சேர்ந்து இதை நிச்சயம் செய்வேன் – அர்ஸ்தீப் சிங் பேட்டி
ஜிம்பாப்வே அணி போட்டியை வெல்வதே குறிக்கோள். விக்கெட் கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பதெல்லாம் அடுத்தது. நாங்கள் ஒரு அணியாக போட்டியை வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியது. உண்மையில் இந்திய பேட்ஸ்மேன்களை அவுட் செய்வது எங்களுடைய அணிக்கு நல்லது. கில் ஒரு நல்ல வீரர் எனவே அவரை வெளியேற்றுவது நல்ல விஷயமாகத்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.