நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நிறைவடையும் வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்போது இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து வரலாற்றில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் தொடருக்கு கடந்த முறை தகுதி பெறாமல் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி பெறுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மே 21ஆம் தேதி முதல் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக மே 29ஆம் தேதி முதல் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
தற்போது முக்கியமான சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் எந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரும் ஒருநாள் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடிக்க கூடியவர்களாக இல்லை. எனவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் எதிர்கால ஒருநாள் கிரிக்கெட் அணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.
ஸ்டார் வீரர்களுக்கு இடமில்லை
மேலும் மிக முக்கியமாக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் அதிரடி வீரர் முன்னாள் கேப்டன் நிக்கோலோஸ் பூரன் இருவரும் சேர்க்கப்படவில்லை. இவர்கள் எதிர்காலத்திலும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணிக்கு வரமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணிகள் விளையாடி வரும் இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : ரபாடாவை ஐபிஎல்-ல் இருந்து அனுப்பிய காரணம் இதுதான்.. அவரே உண்மையை ஒத்துக்கிட்டாரு – குஜராத் டைட்டன்ஸ் டைரக்டர் பேட்டி
வெஸ்ட் இண்டீஸ் அணி: ஷாய் ஹோப் (கே), ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் க்ரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்.






