நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து இடையில் திடீரென தென் ஆப்பிரிக்காவில் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதற்கான காரணம் குறித்து தற்பொழுது குஜராத் Jharkhand அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கில் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா சிறப்பான வேகப் பந்துவீச்சாளர்களை வாங்கி அருமையான அணியை உருவாக்கி இருந்தார். இதில் ரபாடா மிக முக்கியமானவராக காணப்பட்டார். பிறகு அவர் தன் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியதாக குஜராத் டைட்டன்ஸ் தெரிவித்திருந்தது.
ரபாடா நாடு திரும்பியது ஏன்?
இந்த நிலையில் ரபாடா தடை செய்யப்பட்ட பொழுதுபோக்குக்கான போதைப் பொருளை பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் தென் ஆப்பிரிக்கா அனுப்பப்பட்டார். அவருக்கு பெண் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஒரு மாதம் இடைக்கால தடை விதித்தது. இதை அவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தடை முடிவடைந்ததால் மீண்டும் இந்தியா திரும்பி ஐபிஎல் விளையாட இருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் விக்ரம் சோலங்கி கூறும் பொழுது “ரபாடாவை பொறுத்தவரை, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு கிடைக்கப் போகிறார் என்பதுதான் இப்போது நம் முன்னால் இருக்கும் பெரிய செய்தி. கடந்த ஒரு மாதமாக நடந்த விஷயங்கள் மற்றும் தீர்ப்பு குறித்து ரபாடா வருத்தம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது”
பாடம் கிடைத்திருக்கும்
“நான் கூறியது போல அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் விரும்பும் விளையாட்டை மீண்டும் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறார். இந்த விஷயத்தில் இருந்து வாழ்க்கைக்கு தேவையான படிப்பினைகளை எடுப்பார். அவரை மீண்டும் பயிற்சிக்கு கொண்டு வருவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்”
இதையும் படிங்க : இந்த கிரிக்கெட் வீரர் மாதிரி தான் ஆகணும்னு ஸ்கூல்லயே எங்ககிட்ட சொல்லுவாரு.. அப்போ சிரிப்புதான் வரும் – கோலியின் பள்ளி ஆசிரியை
“நாங்கள் அவரை சுற்றி இருக்கும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்தோம். தற்போது முப்பது நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் திரும்பி வந்து விட்டார். இதை திசை திருப்புவது மிகவும் எளிதானது. ஆனால் ரபாடா அப்படி எதையும் செய்யாமல் உண்மையை ஏற்றுக் கொண்டார். மேலும் அவர் விரும்புவதை செய்வதற்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்” என்று கூறுகிறார்.






