இங்கிலாந்து ODI.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 2 முக்கிய வீரர்கள் வெளியேற்றம்.. ஸ்டார் வீரர் மீண்டும் வருகை

0
130
WI

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

வாய்ப்பில்லாத போன இரண்டு உலகக் கோப்பைகள்

வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. மேலும் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கும் தகுதி பெற முடியவில்லை.

இதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு சொந்த நாட்டில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றதால் அதன் காரணத்தால் தகுதி பெற்றது. ஆனால் சூப்பர் 8 சுற்றில் சரிவர விளையாட முடியாமல் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறிய ஏமாற்றம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மூன்று முக்கிய வீரர்கள்

தற்பொழுது சொந்த மண்ணில் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதில் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் பங்கேற்கவில்லை. மேலும் இளம் தொடக்க ஆட்டக்காரர் அலிக் ஆதனஸ் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மேலும் சிம்ரன் ஹெட்மயர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : 12 வருஷம்.. இந்திய அணியை பத்தி.. அந்த ஒரு விஷயத்தை உலகத்துக்கே காட்டிட்டோம் – டிம் சவுதி பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி :

ஷாய் ஹோப் (சி), ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரோன் ஹெட்மியர், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

- Advertisement -