12 வருஷம்.. இந்திய அணியை பத்தி.. அந்த ஒரு விஷயத்தை உலகத்துக்கே காட்டிட்டோம் – டிம் சவுதி பேட்டி

0
383
Sothee

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டிம் சவுதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணியை இந்தியாவில் வைத்து வீழ்த்தியது குறித்து பேசியிருக்கிறார்.

நியூசிலாந்து அணி இந்தியா வருவதற்கு முன்னால் இலங்கையில் அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி படுதோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையிலேயே இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு வரலாற்று வெற்றி

இந்திய அணி கடந்த 12 வருடங்களில் 18 டெஸ்ட் தொடர்களில் சொந்த மண்ணில் தொடர்ந்து தோற்காமல் இருந்து வரலாறு படைத்தது. உலகில் வேறு எந்த பெரிய அணிகளும் எட்ட முடியாத சாதனையாக இது அமைந்திருந்தது. இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது உலகக் கோப்பையை வெல்வதை விட பெரிய விஷயம் என கிரிக்கெட் உலகில் பேசப்படும்.

இப்படியான சூழ்நிலையில் நியூசிலாந்து அணி இந்தியா வந்து கேன் வில்லியம்சன் இல்லாமல் விளையாடி இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பிலும் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

உலகிற்கு காட்டி இருக்கிறோம்

இது குறித்து டிம் சவுதி பேசும்பொழுது “சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியா மிகவும் கடினமான இடம். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சென்று கிரிக்கெட் விளையாடுவது மிக மிக கடினமாக இருந்திருக்கிறது. எதிரணியின் தரம் மற்றும் உள்நாட்டில் அவர்கள் செயல்படும் விதம் ஆகியவற்றை பார்க்கும் பொழுது இந்த இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடுவது கடினமானது”

“இந்திய அணி 12 வருடங்களாக 18 டெஸ்ட் தொடர்களில் உள்நாட்டில் வெற்றி கரமாக இருந்து வந்திருக்கிறது. இந்த வரலாற்றுப் பெருமையை உடைத்த அணியாக நாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியாவில் வெற்றி பெற முடியும் என்று உலகிற்கு நாங்கள் காட்டி இருக்கிறோம்”

இதையும் படிங்க : எங்க நாட்டுக்கு இப்ப வரப்போற இந்திய அணி பிரச்சனையே கிடையாது.. ஈஸியா சமாளிப்போம்.. காரணம் இதான் – பேட் கம்மின்ஸ் பேட்டி

“முதலில் இங்கு விளையாடுவது கடினமானது. அடுத்து நீங்கள் இங்கு வரும்பொழுது ஒவ்வொரு முறையும் சூப்பர் ஸ்டார் வீரர்களுக்கு எதிராக விளையாடுகிறீர்கள். டெண்டுல்கர் சேவாக் லட்சுமணன் டிராவிட் என இது நீள்கிறது. இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக ஒரு இளைஞராக வந்து விளையாடுவது பெரிய கனவு நனவாகும் தருணம் ஆகும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -