பங்களாதேஷ் ODI.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 2 அதிரடி மாற்றம்.. 2027 கோச் சமி திட்டம்

0
290
WI

வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடியிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியை வெளியிட்டிருக்கிறது.

தற்போது பங்களாதேஷ அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. தற்போது இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இரண்டு முக்கிய மாற்றங்கள்

வெஸ்ட் இண்டீஸ் சமீபத்தில் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியில் இருந்து சுழல் பந்துவீச்சாளர் ஹைடன் வால்ஸ் ஜூனியர் மற்றும் பேட்ஸ்மேன் ஆண்ட்ரூ ஜூவல் ஆகியோரை கழட்டிவிட்டு இருக்கிறது.

இதில் ஆண்ட்ரூ ஜூவல் சென்னையில் சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் ஆறு வீரர்கள் எதிர்காலத்திற்காக சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2027 உலகக் கோப்பை திட்டம்

இதுகுறித்து பயிற்சியாளர் டேரன் சமி கூறும் பொழுது ” 2027 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முக்கிய இலக்காகக் கொண்டு நாங்கள் நகர விரும்புகிறோம்.மேலும் குறிப்பாக உள்நாட்டில் நாங்கள் பெற்றுள்ள வெற்றியை அப்படியே தொடரவும் விரும்புகிறோம்.மேலும் குறுகிய காலத் திட்டத்தில் வீரர்களைக் கொண்டு வந்து செயல்படுகிறோம்”

“தற்போது புதிதாக அணியில் கொண்டுவரப்பட்டிருக்கும் கிரிவ்ஸ் முதல் ஆறு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்வார். மேலும்ஆல் ரவுண்டராகவும் இருக்கிறார். இது பிளேயிங் லெவனை உருவாக்குவதில் சிறந்த நெகிழ்வு தன்மையை கொடுக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : நான் உண்மையை சொல்றேன்.. பாபர் அசாம் விஷயத்தில் இதுதான் நடக்க போகுது – சோயப் அக்தர் ஓபன் பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), பிராண்டன் கிங் (துணைகேப்டன்), கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், அமீர் ஜாங்கூ, அல்ஜாரி ஜோசப், ஷமர் ஜோசப், எவின் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்.

- Advertisement -