பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் கிரிக்கெட் எதிர்காலம் எப்படியாக அமையும் என்பது குறித்து அதிரடியாக சோயப் அக்தர் பேசியிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் அசாம் பேட்டிங் மிகவும் மோசமான முறையில் இருந்து வருகிறது. அவர் பேட்டில் இருந்து சதங்கள் நின்று தற்பொழுது அரை சதங்களும் நின்று இருக்கிறது. ஆனால் அவருடைய இடத்திற்கு வந்த கம்ரன் குலாம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவிலும் ஜொலிக்கவில்லை
பாபர் அசாம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடினார் இரண்டு தொடர்களிலும் அவரிடமிருந்து ஒரு அரை சதம் கூட வரவில்லை. இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன் டிராபி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கவலை ஏற்பட்டிருக்கிறது.
மேலும் அதிரடியாக பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து ஏற்கனவே அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது அவர் பேட்டிங் ஃபார்ம் சரியில்லை என்றால் ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து நீக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து மறைமுகமாக தேர்வு குழு தலைவர் அக்கிம் ஜாவேத்தும் கூறியிருக்கிறார்.
மூன்று சதங்கள் வேண்டும்
முதலில் பாபர் அசாம் பற்றி பேசிய அக்தர் கூறும் பொழுது ” பாபர் அசாம் எங்களது நட்சத்திர வீரர் மற்றும் என்னுடைய ஆதரவை பெற்றவர். ஆனால் புதிய அணி நிர்வாகத்துடன் புதிய சிந்தனையுடன் தனது செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓரம் கட்டப்படுவார். சாம்பியன்ஸ் டிராபியில் சிறந்தவராக இருக்க வேண்டும் மூன்று வெற்றி சதங்கள் அடிக்க வேண்டும். இல்லையெனில் அவரது கிரிக்கெட் எதிர்காலம் மிகவும் கடினமாக இருக்கும்”
இதையும் படிங்க : எல்லாரும் ஓவரா பேசாதிங்க.. எங்க பேட்ஸ்மேன் பும்ராவுக்கு இதை செய்வாங்க – அலெக்ஸ் கேரி உறுதி
இதுகுறித்து அக்கிப் ஜாவேத் கூறும் பொழுது “கிரிக்கெட் என்பது தனி நபர்களைப் பற்றியது கிடையாது. தேர்வாளர்களாக நாம் என்ன செய்தாலும் அது பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும் என்பதை பற்றியதுதான். ஆஸ்திரேலியாவில் பாபர் எப்படி பேட்டிங் செய்தார் என்பதை அனைவரும் பார்த்தார்கள். நாங்கள் யாரையும் டார்கெட் செய்யவில்லை. பாபர், ரிஸ்வான், பகார் ஜமான் ஆகியோர் கடந்த காலங்களில் நிறைய அணிக்கு செய்திருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






