பங்களாதேஷ் டெஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் XI அறிவிப்பு.. ஆச்சரிய பவுலிங் யூனிட்.. அதிரடி முடிவு

0
41
WI

பங்களாதேஷ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை அதிரடியாக வெளியிட்டிருக்கிறது.

தற்போது பங்களாதேஷ் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

புதிய அணியை உருவாக்கும் திட்டம்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் இரண்டு அணிகளுமே நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் வெளியேறி விட்டன. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அணியை மற்றும் கலவையை உருவாக்க இரு அணிகளுமே முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டெஸ்ட் போட்டிக்கான தன்னுடைய பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது. இதில் வழக்கம் போல கேப்டன் கிரேக் பிராத்வெயிட் மற்றும் அலிக் ஆதனஸ் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வருகிறார்கள். இதற்கு அடுத்து கீசி கார்தி, ஜோசுவா டி சில்வா, ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் கவிம் ஹாட்ஜ் என முதல் ஆறு இடங்களில் பேட்ஸ்மேன்கள் விக்கெட் இவருடன் இடம்பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

பவுலிங் யூனிட்டில் ஆச்சரிய முடிவு

பொதுவாக வெஸ்ட் இண்டீஸில் ஆடுகளங்கள் தற்காலிகமாக சரி செய்யப்படுகின்றன. இதனால் சீக்கிரத்தில் மெதுவானதாக மாறிவிடும். எனவே இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இந்த முறை அல்ஜாரி ஜோசப், ஷாமர் ஜோசப், கேமார் ரோச் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் என நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் மிக முக்கியமாக சுழல் பந்துவீச்சாளர் வரிசையில் பேட்டிங் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மைக்லே லூயிஸ் என்பவரை கொண்டு வந்திருக்கிறார்கள். இவர் லெக்பிரேக் கூக்லி வீசக்கூடியவர். வழக்கமான ஆப் பின் மற்றும் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் என இருவருமே இடம்பெறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவு ஆச்சரியப்படுத்துகிறது.

இதையும் படிங்க : ஸ்மித் கோலியை இதை வைத்து கம்பேர் செய்யக்கூடாது.. அது இவர்கள் திறமை அல்ல – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் :

கிரேக் பிராத்வைட்
அலிக் அதானஸ்
கீசி கார்டி
ஜோசுவா டா சில்வா
ஜஸ்டின் கிரேவ்ஸ்
கவிம் ஹாட்ஜ்
அல்ஜாரி ஜோசப்
ஷமர் ஜோசப்
மைக்கைல் லூயிஸ்
கேமர் ரோச்
ஜெய்டன் சீல்ஸ்

- Advertisement -