நாங்க இந்த 3 விஷயத்துல சரியே கிடையாது.. இதனாலதான் அமெரிக்கா கிட்ட கூட தோத்துட்டோம் – பாபர் அசாம் வருத்தம்

0
2079
Babar

நடப்பு டி20 உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் கடைசிப் பந்தில் அமெரிக்க அணி வெற்றி பெற்றது.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சதாப் கான் 25 பந்தில் 40 ரன்கள், கேப்டன் பாபர் அசாம் 43 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. பவர் பிளே பாகிஸ்தான் அணிக்கு மிக மோசமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனன்க் படேல் 38 பந்தில் 50 ரன்கள், ஆரோன் ஜோன்ஸ் 26 பந்தில் 36 ரன்கள் எடுக்க, அமெரிக்க அணியும் 20 ஓவர்களில் சரியாக 159 ரன்கள் மட்டுமே மூன்று விக்கெட் இழப்புக்கு எடுத்தது.

இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 18 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுக்க அமெரிக்க அணி அசத்தல் வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் பவர் பிளேவில் நல்ல முறையில் விளையாடவில்லை. நீங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை விழும் பொழுது நீங்கள் பின்னடைவில்தான் இருப்பீர்கள். ஒரு பேட்டராக நீங்கள் முன்னேறி பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். மேலும் முதல் ஆறு ஓவர் பந்துவீச்சில் சிறப்பாகவும் செயல்படவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 1 பந்து 7 ரன்.. சூப்பர் ஓவரில்.. பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி

மேலும் எங்களது சுழல் பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்காதது மிகவும் பிரச்சினையாக மாறிவிட்டது. அமெரிக்க அணிக்கு அனைத்து பாராட்டுகளும் சேர வேண்டும். அவர்கள் எங்களை விட மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் மற்றும் இரட்டை வேகம் இருந்தது. நீங்கள் இங்கு விளையாடும் பொழுது ஒரு நிபுணராக ஆடுகளத்தை மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.