மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் பாகிஸ்தானுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த சூழலில் இந்திய அணி மட்டும் பாகிஸ்தானின் விளையாட மறுப்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி
2008ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதை தவிர்த்து வந்தது. சில பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அத்தகைய முடிவை எடுத்தது. இருப்பினும் பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களில் இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் வந்து விளையாடியது. இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த இருக்கும் நிலையில் இந்திய அணியும் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணி மறுத்ததால் இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைப்ரிட் மாடலில் வேறு ஒரு நாட்டில் வைக்கும் படி கோரிக்கை விடுத்தது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகின் அப்ரிடி பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு தான் ஆதரவளிப்பதாக கூறி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
மறுப்பு தெரிவிக்கும் இந்திய அணி
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விளையாட்டோடு அரசியலை பிண்ணிப் பினைத்ததன் மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட்டை ஆபத்தான நிலையில் வைத்துள்ளது. ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவிப்பதை முழுமையாக ஆதரிக்கிறேன். பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்த போதிலும் பாகிஸ்தான் அணி இந்தியாவில் வந்து விளையாடியது என்பதை மறந்து விடக்கூடாது. ஐசிசி இயக்குனர்கள் குழு தங்களது நேர்மையை நிலை நிறுத்தி அதிகாரத்தை காட்ட வேண்டிய நேரம் இது” என்று அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஆஸில எங்கள் இலக்கு இதுதான்.. இப்ப என்ன நடக்குதோ அதை தொடர விரும்புறேன் – கேப்டன் ரோஹித் பேட்டி
இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கிடையே பிரச்சனையை தீர்த்து வைக்க வருகிற 29ஆம் தேதி இதற்கான கூட்டம் நடைபெற உள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் என்பதை எதிர்பார்க்கலாம். இருப்பினும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட கூடாது என்ற நிலைப்பாட்டில் மட்டும் உறுதியாக இருப்பதால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டிற்கு மாற்றப்படும் என்ற தகவல்கள் வெளியாகிறது.






