தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் அபிஷேக் சர்மா மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மேனா என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா புள்ளிவிபர பட்டியலை வெளியிட்டு விளக்கி இருக்கிறார்.
இந்திய டி20 அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 193 என பிரம்மாண்ட ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். முதல் பந்தில் இருந்து ஆட்டம் இழக்கும் பந்து வரையில் ஒரே பாணியில் அடித்து நொறுக்குகிறார். இதன் காரணமாக அவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.
அபிஷேக் சிறந்தவரா?
இது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” அபிஷேக் ஷர்மா இறங்கி வந்து ஷாகின் அப்ரிடியை அடிக்கிறார். பிறகு அவரை மிகவும் சாதாரணமாக இரண்டு சிக்ஸர்களுக்கு அடிக்கிறார். அவர் விளையாட வந்ததிலிருந்து மிகப் பெரிய அளவில் வெளிப்பாடாக அமைந்திருக்கிறார். பெரிய வெடிக்கும் திறன் பேட்டிங்கில் இருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட் உலகில் சிறந்த பேட்ஸ்மேனா? இதை தெரிந்து கொள்ள மற்றவர்களை பார்க்க வேண்டும்”
“அபிஷேக் ஷர்மா நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடியவர் இல்லை. தற்போதுதான் அவர் வந்திருக்கிறார். கடந்த இரண்டு போட்டிகளில் அவர் 30 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார். ஆனால் அவர் விளையாடும் ஒவ்வொரு முறையும் பார்ப்பவர்களை திகைக்க வைக்கிறார். அவருடைய ஸ்டிரைக் ரேட் யாரும் நம்ப முடியாத அளவிற்கு 193 என இருக்கிறது. மேலும் அவருடைய ஆவரேஜூம் 30 தாண்டி நல்ல நிலையில் இருக்கிறது”
மூச்சை பிடிக்க வைக்கிறது
” அவருடைய ஸ்டிரைக் ரேட் நாம் பார்க்கும் பொழுது அது மூச்சை பிடிக்க வைக்கிறது. இவ்வளவு பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் கடினம். மேலும் இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார் அதில் ஒன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக வந்தது. மேலும் அவர் இரண்டு அரை சதங்களையும் அடித்திருக்கிறார். இந்த வகையில் தற்போது இவர் தான் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்”
இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் திடீர் குழப்பம்.. இந்திய அணி திடீரென செய்த காரியம்.. தொடரை புறக்கணிக்கிறதா? – என்ன நடந்தது?
“இதற்கு அடுத்த இடத்தில் டிராவிஸ் ஹெட், சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் வருகிறார்கள். முதல் ஐந்து இடங்களை பார்த்தால் கூட மூன்று பேர் இந்திய வீரர்களாகவே இருக்கிறார்கள். இதை பார்க்கும் பொழுது இந்திய அணி எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார்.






