டாஸ் முடிந்தது.. இந்தியா மும்முனை தாக்குதல்.. கில் பரிதாபம்.. இங்கிலாந்து செய்த தவறை செய்யாத ஆஸி!

0
823
Rohit

நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டியான இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குவதற்கு டாஸ் போடப்பட்டு இருக்கிறது!

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்திருக்கிறார். இது கொஞ்சம் ஆச்சரியமான முடிவாகவே தெரிந்தாலும் கூட, ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா தரப்பை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஹேசில்வுட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, கேமரூன் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல், மார்ஸ் என ஏழு பந்துவீச்சு விருப்பங்களை கொண்ட அணியாக இருக்கிறார்கள். ஹெட், ஸ்டாய்னிஸ் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. பேட்டிங் வரிசையை நீளமாக்க வோக்சை இங்கிலாந்து கொண்டு வந்து தவறு செய்தது போல ஆஸ்திரேலியா சீன் அப்பாட்டை கொண்டு வந்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கும் சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரரான அவர் இடம்பெறாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு என்பதை தாண்டி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

இஷான் கிஷான் துவக்க வீரராக வருகிறார். நடு வரிசையில் ஸ்ரேயாஸ் இடம் பெற்று இருக்கிறார். மேலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் என ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் சிராஜ் இருக்கிறார்கள். சூரிய குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது ” நிலைமைகள் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கலாம்.
உலகக் கோப்பைக்கு முன்பு நாங்கள் சிறந்த இரண்டு தொடர்களை விளையாடி இருக்கிறோம். கில் சரியான நேரத்தில் குணமடையவில்லை, அவருடைய இடத்தில் இஷான் விளையாடுவார்!” என்று கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது ” முதலில் பேட்டிங் செய்வோம். பேட்டிங் செய்ய நல்ல நிலைமை இருப்பது போல் தெரிகிறது. சூரியன் நன்றாக வெளியே வந்திருக்கிறது. நாங்கள் சமீபத்தில் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். எங்கள் அணியில் ஹெட், அப்பாட், ஸ்டாய்னிஸ் மூன்று பேரும் இந்த போட்டியில் விளையாடவில்லை!” என்று கூறியிருக்கிறார்!