18 வருடங்கள்.. ஐபிஎல்-ல் யாரும் வைக்காத ரெக்கார்ட்.. கெத்தாக சாதித்த மும்பை.. காரணமான 4 வீரர்கள்

0
72
MI

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் இதுவரையில் யாரும் செய்யாத ஒரு பிரம்மாண்ட சாதனையை படைத்திருக்கிறது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 217 ரன்கள் இரண்டு விக்கெட் இழப்புக்கு குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.2 ஓவரில் 117 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகியது. இதைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

- Advertisement -

ஜெயவர்த்தனே செய்த மாற்றங்கள்

கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் ஆனியன் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் பொறுப்பேற்று இருந்தார். புதிய கேப்டன் உள்ளிட்ட அவரது சில முடிவுகள் அணிக்குள் பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்தது. இதன் காரணமாக உடனடியாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவரை நீக்கி விட்டு பழைய பயிற்சியாளர் ஜெயவர்த்தனாவை கொண்டு வந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடுவது கடினமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் பேட்டிங் அணுகுமுறையை கொஞ்சம் மெதுவாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நல்ல துவக்கத்தை பெறுவதில் கவனம் செலுத்துகிறது. இதைத் தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் மும்பை இந்தியன் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த ஃபார்முலாவில் விளையாடி வெற்றி பெற்றார்கள்.

- Advertisement -

மும்பை செய்த மெகா சாதனை

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரியான் ரிக்கல்டன் 38 பந்தில் 61 ரன்கள், ரோகித் சர்மா 36 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 23 பந்துகளைச் சந்தித்து தலா 48 ரன்கள் எடுத்தார்கள்.

இதன் மூலம் ஒரு போட்டியில் ஒரு அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் 45 ரன்கள் தாண்டி எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் புதிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய புதிய பேட்டிங் அணுகுமுறையின் மூலம் படைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : நாங்க எங்க பேட்டிங் பிளான இப்படி மாத்திட்டோம்.. இனி கவலையே கிடையாது கப்புதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

டாப் 4 ஸ்கோர் 25+ (51 முறை)
டாப் 4 ஸ்கோர் 30+ (15 முறை)
டாப் 4 ஸ்கோர் 35+ (4 முறை)
டாப் 4 ஸ்கோர் 40+ (2 முறை)
டாப் 4 ஸ்கோர் 45+ (1 முறை)

- Advertisement -