நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு பேசி இருக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா தங்கள் அணியின் பேட்டிங் அப்ரோச் எப்படி மாற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது? என்பது குறித்து கூறியிருக்கிறார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகள் உடன் 14 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து நான்கு போட்டிகளை தோற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா செய்த மாற்றம்
கடந்த சில வருடங்களாக ரோகித் சர்மா பவர் பிளேவில் அதிரடியான துவக்கத்தை தந்து ஆட்டம் இழப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்திய அணிக்கு பலனளித்த அவரது இந்த பேட்டிங் திட்டம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலன் அளிக்கவில்லை. மும்பை டாப் ஆர்டரில் ரன்கள் வராததால் அந்த அணி திறமையானதாக இருந்தும் கூட தொடர்ந்து நான்கு போட்டிகளை தோற்றது.
இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலர் ஆச்சர் ஷார்ட் பந்துக்கு ஃபீல்டு வைத்து பந்தை வீசிய பொழுதும், ரோகித் சர்மா தன்னுடைய பலமான புல் ஷாட்டுக்கு செல்லவில்லை. மாறாக அவர் அந்த பந்துக்கும் இடம் கொடுத்து ஆப்சைடில் புத்திசாலித்தனமாக விளையாடினார். இந்த அளவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் அப்ரோச் மாறி இருக்கிறது.
நாங்கள் இந்த முறையில் விளையாடுகிறோம்
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது “நாங்கள் பேட்டிங் செய்த விதம் முற்றிலும் சிறப்பானது ஆனால் நாங்கள் இன்னும் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். நாங்கள் அதிகம் கிரிக்கெட் ஷாட்களை விளையாட முயற்சி செய்தோம். நீங்கள் இடைவெளிகளில் விளையாடும் பொழுது ஷாட்டுக்கு மதிப்பு இருக்கும். ரோகித் மற்றும் ரியான் இருவரும் ஒரே மாதிரி விளையாடினார்கள். ரியான் இன்டெண்ட் காட்டி பவுண்டரிகளை குறி வைத்தார் அது சிறப்பாக இருந்தது. இது எங்கள் வீரர்கள் வாய்ப்பு பெறுவது பற்றியது கிடையாது, சூழ்நிலைக்கு என்ன தேவை என்பது பற்றியது”
இதையும் படிங்க : சூரியவன்சி டக் அவுட்.. ரோகித்தும் மும்பையும் செய்த காரியம்.. ரவி சாஸ்திரி தெரிவித்த பாராட்டு
“எங்களுடைய பேட்ஸ்மேன்ஷிப் என்பதற்குள் திரும்ப செல்கிறார்கள். இடைவெளிகளில் அடிப்பது விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுவது பற்றியது. தனிப்பட்ட முறையில் யாரை குறிப்பிட்டு சொல்வது என்று தெரியவில்லை. எங்களிடம் இருக்கும் பவுலிங் யூனிட் அனுபவமும் திறமையும் கொண்டது. எனவே எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. எல்லோரும் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். நாங்கள் எளிமையான கிரிக்கெட்டுக்கு திரும்புகிறோம். அது எங்களுக்கு வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. இந்த நேரத்தில் நாங்கள் பணிவாகவும், இறுக்கமாகவும், கவனமாகவும் இருக்க விரும்புகிறோம்” என்று கூறி இருக்கிறார்.






