டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடி.. தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து பாண்டிங் நீக்கம்.. நீக்கியதற்கான 3 முக்கிய காரணங்கள்

0
43

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்ச்சியாளர் பதவியில் இருந்து நீக்குவதாக டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங்கின் 7 ஆண்டு கால பயிற்சியாளர் பயணம் இதன் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இருப்பினும் பாண்டிங்கை பயிற்சியாளர் பதவியை விட்டு விலக்கியதற்கான மூன்று முக்கிய காரணங்கள் குறித்துப் பார்க்கலாம்.

- Advertisement -

முதலாவதாக டெல்லி அணியின் மோசமான செயல்பாடுகள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு சீசன் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பாண்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ஆனால் அந்த சீசனில் டெல்லி அணி கடைசி இடத்தையே பிடித்தது. பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு 2019ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினர். அதற்கு அடுத்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மும்பை அணியிடம் தோல்வியை தழுவினர்.

2021ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் தகுதி சுற்றில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. ஆனால் 2022 முதல் 24 ஆம் ஆண்டு வரை லீக் சுற்றிலேயே வெளியேறி மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தியது. இதனால் இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இல்லாமல் இருக்கலாம்.

இரண்டாவதாக ஒரு அணி வீரராகவும், கேப்டனாகவும் ஆஸ்திரேலியா அணிக்கு பாண்டிங்கின் யுக்திகள் பெரிதாக கை கொடுத்த போதிலும், பயிற்சியாளராக அது டெல்லி அணிக்கு சரியாக அமையவில்லை. பலவீனமான உத்திகள் காரணமாக கடந்த ஏழு வருடங்களாக டெல்லி அணி சரிவையே சந்தித்து வந்துள்ளது.

- Advertisement -

சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான போட்டிகள் இறுதிவரை வந்து தோல்வி அடைந்தது முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்து வந்த நிலையில் டெல்லிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டிங் மற்றும் கங்குலி என இரண்டு ஜாம்பவான் வீரர்கள் இருந்தபோதிலும் அது டெல்லி அணிக்கு உதவவில்லை என்பதே உண்மை.

இதையும் படிங்க:பாகிஸ்தான் கூட பைனல்.. டீம்ல எங்களுக்கு சொன்ன மெசேஜ் இதுதான்.. குறும்புக்காரங்க வேற – அம்பதி ராயுடு பேட்டி

மூன்றாவதாக இளம் வீரர்களை டெல்லி அணி வளர்க்க தவறியுள்ளது. பிரத்விஷா, ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் பாண்டிங் கீழ் வளர்ந்தாலும், அவரது தலைமையின் கீழ் சில தவறுகளையும் செய்துள்ளது. அனுபவமான உள்நாட்டு வீரர்களான சம்ஸ் மலானி மற்றும் சர்பராஸ் கான் ஆகியோருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன. சில வருடங்களாகவே டெல்லி அணிக்கு குறிப்பிடத்தக்க திறமையான இளம் வீரர் வளரவில்லை. தேஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் போன்றோர் டெல்லி அணியை விட்டு வெளியேறி வேறு அணிகளில் தங்கள் திறமையை நிரூபித்து வெற்றி கண்டனர்.இதனால் இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.