தற்போது இங்கிலாந்தில் முன்னாள் வீரர்கள் பங்கு பெற்று விளையாடும் 6 அணிகளை கொண்டு நடத்தப்பட்ட உலக லெஜென்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற அம்பதி ராயுடுபோட்டியை எப்படி எதிர்கொண்டார்கள்? என்று பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு முன்னணி வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் அடிக்க வில்லை. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.
பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் வரிசையில் நடுவில் வந்த முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அனுரூட் சிங் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். கடைசியில் யூசுப் பதான் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணி 19.1 ஓவரில் இலக்கை 5 விக்கெட் இழந்து எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த முக்கியமான இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற அம்பதி ராயுடு பேசும்பொழுது “கிரிக்கெட்டின் தரம் மிகவும் அருமையாக இருந்தது. இன்று மிகவும் நல்ல தொடக்கமும் எங்களுக்கு கிடைத்தது. யுவி, ஹர்பஜன் அணியை மிகச் சிறப்பாக கையாண்டார்கள். குறிப்பாக எல்லாருமே குறும்புக்காரர்களாக இருந்தோம். நான் ரெய்னா என எல்லோருமே குறும்பு செய்யக் கூடியவர்கள்.
இதையும் படிங்க : 3 போட்டியில தொடர்ந்து தோற்றோம்.. கேப்டனா நான் முக்கியமான அந்த வேலையை செஞ்சேன்.. கப் அடிச்சிட்டோம் – யுவராஜ் சிங் பேட்டி
இப்படி இருந்தாலும் கூட கேப்டன் யுவி பா எங்களை மிகவும் நன்றாக வழி நடத்தினார்.ஒட்டுமொத்தத்தில் அருமையான தொடராக இருந்தது. அதை நாங்கள் ரசித்தோம். மேலும் ரசிகர்களுக்கு சிறப்பு நன்றிகள். அவர்கள் திரண்டு வந்து ஆதரவு கொடுத்தார்கள்.இன்றைய இறுதிப் போட்டிக்கு பந்தை பாருங்கள் விவேகத்துடன் விளையாடுங்கள் என்பதுதான் அணியில் சொல்லப்பட்ட செய்தியாக இருந்தது. மேலும் ஆட்டத்தின் நடுவில் அதிகமாக ஆக்ரோஷமாக விளையாட வேண்டாம் என்று யுவராஜ் சிங் சொன்னார். நாங்கள் அதைச் செய்யவே முயற்சி செய்தோம். ஆனால் நான் கொஞ்சம் எதிர்பாராத நேரத்தில் ஆட்டம் இழந்து விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.