21ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் முதல் முறை.. ஆப்கான் நியூசிலாந்து டெஸ்ட் பரிதாபம்.. தவறு யார் மீது?

0
85
Afghanistan

ஆப்கானிஸ்தான அணி முதல் முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் விளையாட இருந்தது. இந்த போட்டி நான்காவது நாளான இன்று ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டு பரிதாபமான சாதனை பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் சர்வதேச தரத்திலான மைதானங்கள் இல்லாத காரணத்தினால் இந்தியா ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவி செய்து வருகிறது. இந்த வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நொய்டா, டேராடூன் மற்றும் லக்னோ ஆகிய மூன்று இடங்களில் இந்தியா மைதானங்களை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சர்ச்சையான முதல் டெஸ்ட்

ஆப்கான் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெல்லி கிரேட்டர் நொய்டாவை தேர்ந்தெடுத்தது. ஆப்கானிஸ்தான் காபுல் நகரத்துக்கும் டெல்லிக்கும் மற்ற நகரங்களை விட தூரம் குறைவாக இருந்ததால் அவர்கள் இவ்வாறு தேர்வு செய்து இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் சரியான மழைநீர் வடிகால் வசதி கிடையாது. போட்டி துவங்குவதற்கு முன்பிருந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மைதானத்தை மைதான ஊழியர்களால் சீர் செய்யவே முடியவில்லை. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கேட்ட மைதானத்தை இந்தியா தரவில்லை என்று செய்திகள் பரவியது. பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாங்கள் தான் டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தைக் கேட்டு வாங்கியதாக அறிக்கை வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

- Advertisement -

21ம் நூற்றாண்டில் முதல் முறை

இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவது இத்தோடு சேர்த்து எட்டு முறை நிகழ்ந்திருக்கிறது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆசஸ் டெஸ்ட் தொடரில் 1890, 1938, 1970 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்கிறது. மற்ற நான்கு நிகழ்வுகள் 1989 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்றிருக்கின்றன.

இதையும் படிங்க : இந்தியா டெஸ்ட் வருது.. ஸ்மித்காக நான் பேசணும்.. அதனால அவர வெச்சு இந்த பரிசோதனை பண்ணாதீங்க – உஸ்மான் கவாஜா பேட்டி

இந்த வகையில் 21 ஆம் நூற்றாண்டில் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஒரு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட அரிய நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சார்ஜாவில் வைத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட ஆப்கானிஸ்தான அணி செல்கிறது!

- Advertisement -