இந்தியா டெஸ்ட் வருது.. ஸ்மித்காக நான் பேசணும்.. அதனால அவர வெச்சு இந்த பரிசோதனை பண்ணாதீங்க – உஸ்மான் கவாஜா பேட்டி

0
27

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியினர் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா வீரரான உஸ்மான் கவாஜா ஸ்மித் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் மிடில் வரிசையில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னரின் ஓய்வுக்கு பிறகு மாற்றப்பட்டார். இந்த நிலையில் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ஓரளவு நன்றாக விளையாடினாலும் மிடில் வரிசையில் விளையாடுவது போல அது ஆஸ்திரேலியா அணிக்கு பயனுள்ளதாக அமையவில்லை.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா ஸ்மித் திரும்பவும் ஸ்மித் நான்காவது வரிசையில் களமிறங்கி விளையாடுவதே நல்லது என்று கூறி இருக்கிறார். தற்போது அவருக்கு பதிலாக நான்காவது இடத்தில் கிரீன் களமிறங்கி விளையாடி வரும் நிலையில் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக அமைய ஸ்மித் திரும்பவும் மிடில் வரிசையில் களமிறங்குவதில் நல்லது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஸ்மித் இந்த நிலைமை குறித்து ஒருபோதும் சொல்ல மாட்டார். ஆனால் அவருக்காக நான் சொல்கிறேன். தொடக்க இடம் என்பது மிகவும் முக்கியமானது. எனது சகாப்தத்தில் சிறந்த டெஸ்ட் வீரரான ஸ்மித் எங்களிடம் இருப்பதாக நான் உணர்கிறேன். இருப்பினும் அவருக்கு நான்காவது இடமே மிகச் சிறந்தது. எங்கள் அணிக்கு சிறந்த சமநிலையாக லாபுஷான் மூன்றாவது இடத்திலும் ஸ்மித் நான்காவது வரிசையிலும் களமிறங்க வேண்டும்.

எது எவ்வாறாக இருப்பினும் அணிக்கு எது சிறந்தது என்பதை பொறுத்து அனைத்தும் அமைய வேண்டும். எங்கள் பேட்டிங் ஆர்டர் எந்த வரிசையில் அதிக ரன்களை இருக்கிறது என்பதை பார்ப்பது நல்லது. ஸ்மித் அல்லது வார்னர் தொடக்க வரிசையில் எவ்வளவு ரன்கள் எடுத்தார்கள் என்று பார்க்க வேண்டும். இவர்களது தொடக்கத்தில் நிறைய ஆட்டங்களை வென்றிருக்கிறோம்.

இதையும் படிங்க:விராட் ரோஹித் இடத்தை நிரப்ப.. இவங்க 2 பேர்தான் பெஸ்ட் சாய்ஸ்.. அதுக்கு காரணம் இருக்கு – பியூஸ் சாவ்லா பேட்டி

ஆனால் எங்களால் முடிந்த அளவிற்கு நாங்கள் இந்த வரிசையில் ரன்களை எடுத்ததாக நினைக்கவில்லை. அதனால் ஸ்மித் நான்காவது வரிசையில் களமிறங்குவதே சிறந்தது என்று கூறியிருக்கிறார். விரைவில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் களமிறங்குவதால் இது போன்ற பரிசோதனை முயற்சி அவசியம் அற்றது என்பதே அவரது கருத்தாகும்.

- Advertisement -