இன்று ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் டி20 லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஹரிகேன் ஹோபர்ட் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஸ்டீவ் ஸ்மித்தின் சிட்னி சிக்ஸர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹரிகேன் ஹோபர்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் நட்சத்திர வீரர் ஸ்மித் அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 43 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 68 ரன்கள் எடுத்தார்.
போராடி மீண்ட சிட்னி சிக்ஸர்ஸ்
இதைத் தொடர்ந்து அந்த அணிக்கு மிடில் வரிசையில் இருந்து சிறிய பங்களிப்பு மட்டுமே கிடைத்தது. கேப்டன் மோய்சஸ் ஹென்றிகுய்ஸ் 12 பந்துகளில் 27 ரன்கள், லசுலன் ஷா 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்கள். இதனால் ஒரு வழியாக சிக்னி சிக்ஸர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. ரயிலி மெரிடீத் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய ஹரிகேன் ஹோபர்ட் அணிக்கு கேப்டன் பென் மேக்டோமெர்ட் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 40 ரன்கள் எடுத்தார். இறுதியாக அந்த அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் தகுதி சுற்றும் போட்டியில் தோல்வி அடைந்திருந்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி இந்த போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பாபர் அசாம் சோகம்
இந்தத் தொடருக்கு நாற்பதாயிரம் ஆஸ்திரேலிய டாலருக்கு பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வாங்கப்பட்டார். அவர் மொத்தமாக 200+ ரன்கள் மட்டுமே அதுவும் 103 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : 2வது டி20.. இந்தியா யாரும் எதிர்பார்க்காத 2 மாற்றம்.. காரணம் என்ன?.. சூரியகுமார் சொன்ன விளக்கம்
இந்த நிலையில் பாபர் அசாம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்ததும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து எலிமினேட்டர் சுற்றில் அந்த அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது. ஒருவேளை அவர் விளையாடி இருந்தால் தோற்று இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.






