2வது டி20.. இந்தியா யாரும் எதிர்பார்க்காத 2 மாற்றம்.. காரணம் என்ன?.. சூரியகுமார் சொன்ன விளக்கம்

0
31
Surya

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத இரண்டு மாற்றங்களை செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் மாற்றங்கள்

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் தரப்பில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த அணியில் இருந்து ஜெமிஷன் காயமடைந்து ஒட்டுமொத்தமாக டி20 உலகக்கோப்பை அணியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார். இவருடைய இடத்திற்கு அனுபவ பந்துவீச்சாளர் மேட் ஹென்றி கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

மேலும் அந்த அணியில் கிளார்க் நீக்கப்பட்டு ஜாக் போல்க்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். இத்துடன் துவக்க ஆட்டக்கார டிம் ராபின்சன் நீக்கப்பட்டு டிம் செப்பர்டு சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த அணியில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் இரண்டு மாற்றங்கள்

முதல் போட்டியில் விரலில் காயமடைந்த ஆல்ரவுண்டர் அக்சர் படேல் விளையாடவில்லை. அவருடைய இடத்திற்கு குல்தீப் யாதவ் கொண்டுவரப்பட்டு இருக்கிறார். மேலும் நட்சத்திர பவுலர் பும்ரா நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு ஆல் ரவுண்டர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் வித்தியாசமான காம்பினேஷனில் மீண்டும் வரிசை 8 வரையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க :19 பவுண்டரி 9 சிக்சர்.. மிரட்டல் இரட்டை சதம்.. சர்ப்ராஸ் கான் ருத்ர தாண்டவம்.. கில் ஏமாற்றம்.. கம்பீர் அகர்கர் கண்டு கொள்வார்களா?

இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம். பனிப்பொழிவு இப்போதே வர ஆரம்பித்துவிட்டது. சமீப காலமாக நாங்கள் சேஸ் செய்யவில்லை. எனவே அதை செய்ய நினைக்கிறோம். இது தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம். நாங்கள் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக் கொள்கிறோம். மேலும் காயமடைந்த அக்சர் படேல் விளையாடவில்லை. பும்ராவுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -