தற்போது பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் பெரிய வரலாற்று தோல்வி ஒன்றுக்கு பாகிஸ்தானுக்கு விதி விளையாடிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை வகிக்கிறது.
முதல் வரலாற்றுத் தோல்வி
பங்களாதேஷ் அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு தகுதி பெற்ற காலத்தில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றது கிடையாது என்கின்ற சோகமான நிலை இருந்து வந்தது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி வெற்றி பெறுவது அவர்களுக்கு எப்பொழுதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதே வேளையில் பாகிஸ்தானுக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான தோல்வி மோசமானதாக ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தங்கள் சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் அணிக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் வரலாற்று வெற்றி கிடைத்தது. இதன் காரணமாக அந்த அணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயல் அடித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது வரலாற்றுத் தோல்வி
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் துவங்க இருந்தது. ஆனால் மழை துவங்குவிடாமல் பெரிய இடையூறு கொடுத்துக் கொண்டு வருகிறது. இதனால் இன்னும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
இதையும் படிங்க : ஆர்சிபி இல்ல.. ஐபிஎல் 2025ல் ரோகித் இந்த 2 டீம்ல ஒன்னுல தான் ஆடுவார் – ஹர்பஜன் சிங் பேட்டி
இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி டிரா அடையும் பட்சத்தில், பாகிஸ்தானில் அணி பங்களாதேஷ் அணியிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல், முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்கும் வரலாற்றுத் தோல்வியை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஏற்கனவே கடும் விமர்சனங்கள் உள்நாட்டில் கிளம்பி இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இது பெரிய சோதனையாக அமைந்திருக்கிறது!