பொய் சொல்லி துபாய்க்கு பறந்த இலங்கை வீரர்.. சிக்கலில் மாட்டிய தசுன் சனகா.. ஒரே நாள்.. இரண்டு நாட்டு கிரிக்கெட்

0
833

இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தசுன் சனகா கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரே நாளில் இரண்டு நாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்தார்.

அது அப்போது பெரிய விஷயமாக பேசப்பட்டாலும், தசுன் சனகாவுக்கு தற்போது அதுவே அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரண்டு நாடுகளில் கிரிக்கெட்

இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தசுன் சனகா துபாயில் நடைபெற்று வரும் ஐஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடவதற்காக துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி இருந்தார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளிலும் துபாய் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டாம் தேதி இலங்கை அணிக்காக உள்நாட்டு தொடரின் முதல் தரப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அங்கிருந்து துபாய்க்கு பயணம் மேற்கொண்டு அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறார்.

உள்நாட்டு தொடரான முதல் தரப் போட்டியில் மூன்று நாட்கள் கொண்ட ஆட்டத்தில் பங்கேற்ற அவர், முதல் இரண்டு நாட்களில் விளையாடி 87 பந்துகளில் 123 ரன்கள் குவித்து இருக்கிறார். அப்போது இலங்கை முதல் தர அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்த நிலையில் எதிரணிக்கு எதிராக அவர் பந்து வீசவில்லை. எனவே மூன்றாவது நாளில் பல மணி நேரம் பயணம் மேற்கொண்டு துபாயில் ஐஎல் டி20 தொடரில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

உண்மைக்கு மாறான தகவல்

அந்தப் போட்டியிலும் சனகா 12 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் சனகா போட்டி முடிவடைவதற்கு முன்பாகவே டி20 தொடரில் விளையாட சென்றிருக்கிறார் என்று அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது குறித்த அந்த அறிக்கையில் ‘சனகா துபாயில் விளையாடுவதற்காக கொழும்பில் நடைபெற்ற முதல் தர போட்டியில் நடுவராக இருந்த வெண்டெல் லப்ரூயிடம் மாற்று வீரரை அங்கீகரிக்க சனகாவுக்கு தலைப்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி நம்ப வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது’. அதாவது ஒரு வீரருக்கு தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவருக்கு பதிலாக மாற்று வீரர் அணியில் விளையாட முடியும்.

இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி முக்கியமா.? நீங்க அதுல மட்டும் கவனம் செலுத்துங்க.. லபுசேன் குறித்து முன்னாள் ஆஸி வீரர் பேட்டி

எனவே சனகா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி துபாயில் சென்று டி20 தொடரில் விளையாடி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சனகாவின் முதல் தர கிளப்பின் மூலம் அவர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதற்கு முன்பு இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா ஒரே நாளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் அதற்கு அடுத்த நாள் இலங்கையில் உள்நாட்டு போட்டியிலும் விளையாடி இருக்கிறார். இருப்பினும் சனகா உண்மைக்கு மாறான தகவலை கூறி உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்று குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -