சாம்பியன்ஸ் டிராபி முக்கியமா.? நீங்க அதுல மட்டும் கவனம் செலுத்துங்க.. லபுசேன் குறித்து முன்னாள் ஆஸி வீரர் பேட்டி

0
164

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை வெற்றி பெற்ற நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டேமியன் பிளமிங் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மார்னஸ் லபுசேன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட கூடாது என அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இக்கட்டான நிலையில் ஆஸி அணி

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என கூறப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அந்தத் திட்டத்தை தவிடு பொடி ஆக்கி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹாசில் வுட் ஆகியோர் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

எனவே ஆஸ்திரேலியா அணியை டிராவிஸ் ஹெட் அல்லது ஸ்மித் அணியை வழி நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சாம்பியன் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் பேட்ஸ்மேன் வீரரான மார்னஸ் லபுசேன் பாகிஸ்தானில் இந்த தொடரை விளையாட இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேமின் பிளமிங் மார்னஸ் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் விதமாக மார்னஸ் ஆஸ்திரேலிய உள்நாட்டுத் தொடரில் விளையாடியிருக்க வேண்டும் என சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

அவர் எடுத்தது தவறான முடிவு

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தற்போது ஆஸ்திரேலியா அணி விளையாடி வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் மார்னஸ் 26 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம் அவரது நம்பிக்கை சற்று அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கிறேன். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அவர் பாகிஸ்தான் சென்று விளையாடுவது தவறான முடிவு என்று நான் நினைக்கிறேன். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு தொடரான ஷெபீல்ட் தொடர் அவரது பேட்டிங்கை மேம்படுத்த நன்றாக உதவி இருக்கும் என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:வரலாறை திருப்புங்க பாஸ்.. இந்திய அணியிடம் தோற்றாலும்.. சாம்பியன் கோப்பை எங்களுக்குதான் – இங்கி மார்க்வுட் பேட்டி

லபுசேன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளில் 6 மற்றும் 16 ரன்கள் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகளில் 4,0,19 என குறைவான ரன்கள் எடுத்திருந்தாலும் ஆஸ்திரேலியா அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இக்கட்டான நேரத்தில் ஆஸ்திரேலிய அணியை காப்பாற்ற சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

- Advertisement -