இரானி கோப்பை 2024.. அணிகள் அறிவிப்பு.. கேப்டனாக ருதுராஜ் ரகானே.. 3 இந்திய அணி வீரர்கள் விடுவிப்பு

0
366
Ruturaj

இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான இரானி கோப்பைக்கு இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் கேப்டனாக ருதுராஜ் மற்றும் ரகானே இருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரானி கோப்பையில் கடந்த சீசனில் ரஞ்சி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியும், அதற்கு எதிராக பல மாநில இந்திய வீரர்களைக் கொண்ட ரெஸ்ட் ஆப் த இந்திய அணியும் மோதிக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரகானே மற்றும் ருதுராஜ் கேப்டன்

இதில் கடந்த சீசனில் ரஞ்சி தொடரை வென்ற மும்பை அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் ரெஸ்ட் ஆப் த இந்திய அணிக்கு ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத ருதுராஜுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் தயாராக பெரிய பொறுப்புகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வருட இரானி கோப்பை தொடர் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரையில் லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடருக்கு இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் துருவ் ஜுரல், யாஸ் தயால் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் விடுவிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உடன் இருக்க மாட்டார்கள்.

- Advertisement -

இரானி கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட அணிகள்

மும்பை அணி : அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ப்ரித்வி ஷா, ஆயுஷ் மத்ரே, முஷீர் கான், ஷ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர் (வி. கீ), சித்தந்த் அத்தாத்ராவ் (வி. கீ), ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், ஹிமான்சு சிங், ஷர்துல் தக்தூர்தி , முகமது. ஜூன்ட் கான், ராய்ஸ்டன் டயஸ் மற்றும் இந்திய அணிக்கான பணிகளில் விடுவிக்கப்பட்டால் சர்பராஸ் கான் மற்றும் ஷிவம் துபே அணியில் இணைவார்கள்.

இதையும் படிங்க : கிரிக்கெட்டுகாகவே பிறந்த பையன் இவரு.. ரோகித் கிட்ட 10 முறை சொன்னேன் – ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு

ரெஸ்ட் ஆப் த இந்திய அணி : ருதுராஜ் கெய்க்வாட் ( கேப்டன), அபிமன்யு ஈஸ்வரன் (விசி), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (வி.கீ), இஷான் கிஷன் (வி. கீ), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயால், ரிக்கி புய், ஷஷ்வத் ராவத், கலீல் அகமது மற்றும் ராகுல் சாஹர்.

- Advertisement -