2வது டெஸ்ட்.. ஒரு அனுபவ வீரர்கூட கிடையாது.. நியூசிலாந்தை சம்பவம் செய்த தென் ஆப்பிரிக்கா

0
2436
Williamson

தற்பொழுது பெரிய அளவில் சர்வதேச அனுபவம் இல்லாத இளம் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

தொடரின் முதலில் நடைபெற்ற போட்டியில் அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணியை மிக எளிதான முறையில் வீழ்த்தி நியூசிலாந்து தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி துவங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

நேற்றைய முதல் ஆட்ட நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு தாக்குப் பிடித்து விளையாடி 221 ரன்கள் சேர்த்து எடுத்தது. அந்த அணிக்கு முதலில் இதுவே வெற்றியாகத்தான் பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் 4 மற்றும் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்வார்டிட் 156 பந்தில் 64 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூசிலாந்து அணி அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு குழுவிடம் 211 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 77.3 ஓவர்கள் நியூசிலாந்து அணி விளையாடி ஆல் அவுட் ஆக, இரண்டாவது நாள் போட்டி இத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.

நியூசிலாந்துக்கு முதல் இன்னிங்ஸில் டாம் லாதம் 40, வில்லியம்சன் 43, வில் யங் 36, வாக்னர் 33, ரச்சின் ரவீந்திர 29 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க தரப்பில் இளம் வீரர் பீடிட் அபாரமாக பந்து வீசி 32 ஓவர்கள் பந்துவீசி, 89 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : நாளை 3வது டெஸ்ட் போட்டி.. டிராதான் ஆகுமா?.. ராஜ்கோட் மைதானத்தின் டெஸ்ட் வரலாறு என்ன?

தற்பொழுது இளம் அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் தாக்குப் பிடித்து விளையாடி 250 ரன்கள் எடுத்தால், உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு அபார வெற்றியை தென் ஆப்பிரிக்க அணி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது!

- Advertisement -