நாளை இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது.
புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்று இருக்கின்றன. பொதுவாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக இது அதிக அளவில் இருந்தது இல்லை.
இந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கும் பிசிசிஐ ஐந்து புதிய டெஸ்ட் மைதானங்களை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக வழக்கமான சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களும் இல்லை. இதனால் போட்டியில் நல்ல விறுவிறுப்பு இருக்கிறது.
நாளை மூன்றாவது போட்டி துவங்கும் ராஜ்கோட் மைதானத்தின் ஆடுகளத்தில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் செய்வதற்கு மிக சாதகமான ஆடுகளங்கள்தான் இருந்திருக்கின்றன.
இந்த இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மட்டும் இல்லாமல், தொடர்ச்சியாக அங்கு நடைபெற்ற உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், ராஜ்கோட் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்ய வசதியாகவே இருந்திருக்கிறது.
இந்திய அணி இன்று முதலில் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி டிரா செய்தது. இதற்கடுத்து 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக பெரிய ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பொழுது இந்திய அணி இன்று முதல் இன்னிங்ஸில் 649 ரன்களை 9 விக்கெட் இழப்புக்கு குவித்தது. இதே வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதுதான் இந்த மைதானத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
அதே சமயத்தில் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் பொழுது இங்கிலாந்து 537 ரன்கள் குவிக்க, இந்திய அணி 488 ரன்கள் எடுத்தது. இதற்கடுத்து இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்திருந்தது. இந்த போட்டி வெகு சாதாரணமாக டிராவில் முடிவடைந்தது.
இதையும் படிங்க : “ப்ளீஸ் எங்களை இப்படி மட்டும் சொல்லாதிங்க.. நாங்க விளையாடும் பிளான் இதுதான்” – இங்கிலாந்து துணை கேப்டன் போப் பேச்சு
எனவே இப்படியான இந்த மைதானத்தின் தொடர்ச்சியான புள்ளி விபரங்களை வைத்து பார்க்கும் பொழுது, மேலும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுவதில் இருந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் டிரா ஆகவே அதிக வாய்ப்பு இருக்கிறது என தெரிகிறது.