தென் ஆபிரிக்கா சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் டி20 தொடருக்கான அணியை அறிவித்திருக்கிறது.
பாகிஸ்தான அணி இந்த மாதத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும், இதற்கு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
மாஸ்டர் பிளான் போட்ட தென் ஆப்பிரிக்கா
தற்போது தென் ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியை அந்த அணி வென்று இருக்கிறது. இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடுகிறது.
தென் ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணில் விளையாட இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் வீரர்களை சேர்க்காமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கிறது. இதன் காரணத்தால் இரண்டாம் கட்ட அணியை விளையாட வைக்கிறது. இந்திய அணிக்கு இது பின்னடைவுதான்!
அதிரடி புதிய கேப்டன்
தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் களம் இறங்க இருக்கும் இரண்டாம் கட்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஹென்றி கிளாசன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம் பெற மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பிறகு க்வேனா மாபாகா, மேத்யூ ப்ரீட்ஸ்கே மற்றும் ரியால் ரிக்கல்டன் ஆகியோர் டி20 தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்படும். இத்தோடு குளோபல் டி20 லீக்கில் விளையாடி வரும் ஷம்சி கிடைப்பதும் பிறகே முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க : ஆஸி அணி பற்றி கவாஸ்கர் பேச்சு குப்பையானது.. இந்தியாவில் அது நடக்கும் இங்க நடக்காது – ரியான் ஹாரிஸ் விமர்சனம்
தென் ஆப்பிரிக்கா டி20 அணி : ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், ஜார்ஜ் லிண்டே, க்வேனா மபாகா, டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, நகாபா பீட்டர், ரியான் ரிக்கெல்டன்*, டப்ரைஸ் ஷம்சி, சிமிலானே மற்றும் வான் டெர் டஸ்ஸன்.






