ஆஸ்திரேலியா அணி குறித்து சுனில் கவாஸ்கர் தொடர்ந்து பேசி வரக்கூடியது குப்பையானது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரியான் ஹாரிஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்தது தற்பொழுது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
சம்பவத்தின் முழு பின்னணி
முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஹேசில்வுட் பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது, ஆஸ்திரேலியா அணி இக்கட்டான நிலைமையில் இருந்தது குறித்து தன்னிடம் கேட்கக் கூடாது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களிடம் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் பேச ஆரம்பித்தன.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சுனில் கவாஸ்கர் ஹேசில்வுட் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விதத்தின் காரணமாக விலகல் நடந்திருப்பதாக சந்தேகம் தெரிவித்தார். அவருடைய விலகலில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குதான் தற்பொழுது ரியான் ஹாரிஸ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்தியாவில் வேண்டுமானால் இப்படி நடக்கலாம்
இதுகுறித்து ரியான் ஹாரிஸ் கூறும் பொழுது “பாருங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் எப்பொழுதும் கோஷ்டி இருக்காது. சுனில் கவாஸ்கர் கூட இப்படி சொல்லிக் கொண்டிருப்பதை நான் அறிகிறேன். அவருடைய அந்த கருத்துக்கள் குப்பையானது. ஆஸ்திரேலியாவில் இப்படி எதுவும் நடக்காது. இந்தியாவில் நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அங்கு நான் வாழ்ந்திருக்கிறேன்”
இதையும் படிங்க : 10 விக்கெட் வித்தியாசம்.. 13 வயது சூரியவன்சி அதிரடி.. இந்தியா U19 அணி செமி பைனல்.. யுஏஇ தோல்வி
“கவாஸ்கர் கூறியது போல அணியில் எதுவும் கிடையாது. அணியில் உள்ள வீரர்கள் எல்லோரும் புத்திசாலிகள். அவர்களுக்கு எங்களுடைய மீடியாக்கள் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து நன்றாகவே தெரியும். தற்போது கவாஸ்கர் இப்படியான அதிரடியான விஷயங்களை பேசுகின்ற காரணத்தினால், எங்களுடைய மீடியாக்கள் அவர் பிடித்து வைத்துக் கொள்கின்றன. ஆனால் அதில் எதுவும் உண்மை கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






