இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு முதல் பங்களாதேஷில் உள்நாட்டு சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்திய அணி பங்களாதேஷ் சென்று விளையாடுவதற்கு தயக்கம் காட்டி வந்தது. அதே சமயத்தில் இந்திய அணிக்கு போட்டி அட்டவணை கடுமையாக இருந்ததால் இந்த தொடர்கள் தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டது.
புதிய திட்டம்
இந்திய அணி பங்களாதேஷ்க்கு கடந்த ஆண்டு பிற்பகுதியில் சென்று இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்கு முடிவு செய்து அட்டவணையையும் வெளியிட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பங்களாதேஷ் உள்நாட்டு சூழ்நிலை மிகவும் மோசம் அடைந்திருந்தது.
எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த சுற்றுப்பயணத்தை உடனடியாக ரத்து செய்து விட்டது. அதே சமயத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். எனவே பங்களாதேஷ் இந்த வருமானத்தை விட்டு விட விரும்பவில்லை. இதைத்தொடர்ந்து மீண்டும் பங்களாதேஷ் இந்தத் தொடரை நடத்துவதற்கான முயற்சிகள் செய்து தற்போது அட்டவணையையும் வெளியிட்டு இருக்கிறது.
நட்சத்திர வீரர்களின் கடைசி தொடர்
முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1, 3, 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இதுவே கடைசி பங்களாதேஷ் சுற்றுப்பயணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கு பங்களாதேஷில் பெரிய வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரன்கள் எடுக்க அலையாம.. நான் சொல்றத மட்டும் மனசுல வச்சுக்கிட்டு ஆடினா.. சூர்யாவுக்கு ரன்கள் தானா வரும் – தமிழ்நாடு முன்னாள் கோச்
இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த போட்டிகள் செப்டம்பர் 9, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. எந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.






