ரன்கள் எடுக்க அலையாம.. நான் சொல்றத மட்டும் மனசுல வச்சுக்கிட்டு ஆடினா.. சூர்யாவுக்கு ரன்கள் தானா வரும் – தமிழ்நாடு முன்னாள் கோச்

0
32

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்தில் இருந்து டி20 உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் குறித்து தமிழ்நாடு மற்றும் மும்பை அணியின் முன்னாள் பயிற்சியாளர் சுலக்சன் குல்கர்னே சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் பெரிய கவலையாகி வருகிறது. அவர் கடைசியாக விளையாடிய 21 இன்னிங்ஸ்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். மேலும் அவரது பேட்டிங் சராசரி மிகவும் மோசமாக 13.63 என்கிற நிலையில் இருக்கிறது.

எனவே அவர் டி20 உலக கோப்பைக்கு முன்பாக மீண்டும் பேட்டிங் பார்முக்கு வர வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார். மேலும் அவர் வலை பயிற்சியில் சிறப்பாக பேட்டிங் செய்வதாகவும், கூடிய விரைவில் ரன்கள் வரும் என்கிற நம்பிக்கையோடு தான் இருப்பதாக சூரியகுமார் பேசியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணியின் முன்னாள் பயிற்சி ஆளாக இருந்த சுலக்சன் குல்கர்னி சூரியகுமார் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது ” இது t20 வடிவம் என்பதால் சூரியகுமார் யாதவின் நுட்பத்திற்கு எந்த பிரச்சனையும் கிடையாது. பிரச்சனை என்பது அவருடைய மனநிலை மற்றும் பேட்டிங் அணுகு முறையில் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஆட்டம் இழக்காமல் 47 ரன்கள் எடுத்தது ஒரு சிறப்பான ஆட்டமாகும். ஆனால் சில நேரங்களில் என்ன நடக்கிறது என்றால் எதிரணியினர் குறைவான ரன்னில் ஆட்டம் இழக்கும்போது உங்களுக்கு பேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம்.

இதையும் படிங்க:சச்சின் அடிச்ச 100 சதங்கள்ல.. மிகவும் பெஸ்ட் சதம்னா இதைத்தான் சொல்வேன்.. அதுக்கு ஒரு தைரியம் வேணும் – முன்னாள் இந்திய வீரர்

உங்கள் பேட்டிங் ரிதம் பாதிக்கப்படலாம் ஆசிய கோப்பையில் சூர்யாவுக்கு அந்த அனுபவம் இருந்ததாக தெரிகிறது. ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக அவரது திறமையும் செயல்பாட்டு பாணியும் கருத்தில் கொண்டு அவர் ரன்களுக்கு பின்னால் ஓடக்கூடாது. அவர் செய்ய வேண்டியது தலா ஐந்து பந்துகள் என்னும் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட வேண்டும். அவர் பத்து முதல் 15 பந்துகள் தாக்கு பிடித்து விட்டால் அதற்குப் பிறகு அவரது பேட்டையில் இருந்து ரன்கள் தானாக வரும் என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -