பும்ராவின் காயம் எப்படியானது.. விவரம் எப்போது வரும்.. நாளை ஆடுவாரா? – வெளியான புதிய தகவல்கள்

0
509
Bumrah

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பும்ரா காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறி ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கு சென்றார்.

இந்த நிலையில் அவரது காயம் எந்த பகுதியில் ஏற்பட்டிருக்கிறது? காயம் குறித்தான ஸ்கேன் அறிக்கை எப்பொழுது வெளிவரும்? நாளை பந்துவீச்சுக்கும் பும்ரா மீண்டும் திரும்பி வருவாரா? என்பது போன்ற பல கேள்விகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே எச்சரித்த ரசிகர்கள்

நடப்பு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு நிறைய பணிச்சுமை இருந்து வந்தது. ஏற்கனவே அவர் ஒரு பெரிய காயத்தில் இருந்து திரும்பி வந்திருக்கிறார். தனி ஒரு வீரராக பந்து வீச்சு யூனிட்டுக்கு தலைமை தாங்கி போராடி வருவதால் அவர் மீண்டும் காயமடைவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என இந்திய ரசிகர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தார்கள்.

அதே சமயத்தில் இந்திய அணி நிர்வாகத்திற்கு இந்த தொடரில் பும்ராவை விட்டால் வேறு யாரும் கிடையாது. எனவே அவர்கள் தொடர்ந்து பும்ராவை விளையாட வைத்து வந்தார்கள். இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் கவலைப்பட்டது போலவே கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா காயமடைந்து விட்டார். அதே சமயத்தில் இந்த போட்டியை இந்திய அணி வெல்வதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஸ்கேன் அறிக்கை எப்போது வரும்?

பும்ராவுக்கு காயம் முதுகு பகுதியில் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் ஏற்கனவே அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட அழுத்தம்தான் ஒரு ஆண்டுக்கு மேல் கிரிக்கெட் விளையாடாமல் இருப்பதற்கு காரணமாக இருந்தது. பிறகு நியூசிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து திரும்பி வந்தார்.

இதையும் படிங்க : கான்ஸ்டாஸ் நாக்கை அடக்கி கொள்ள வேண்டும்.. பும்ரா கிட்ட மொத்த வாழ்க்கையும் பிரச்சனை – மார்க் வாக் அறிவுரை

பும்ரா குறித்து வெளியான செய்தியில் “பும்ரா சென்டினியல் பார்க் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு முதுகுப் பகுதியில் வலி இருக்கிறது. இதற்காக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த முக்கிய ஸ்கேன் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -