ஆஸ்திரேலியா இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவிடம் வாக்குவாதத்திற்கு சென்றது சரி இல்லாத ஒன்று என ஆஸ்திரேலிய லெஜெண்ட் மார்க் வாக் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 19 வயதான ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் களத்தில் விராட் கோலி போல ஆக்ரோஷமாக இருக்கக்கூடியவராக இருக்கிறார். அதே சமயத்தில் நேற்று இந்திய வீரர் பும்ராவிடம் தேவையில்லாமல் வம்புக்கு சென்றார். இதற்கு உடனடியாக பும்ரா பதிலடி கொடுத்தார்.
ஜெய்ஸ்வாலுக்கு ஆஸ்திரேலியாவில் நடந்தது
இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் இடம் உங்கள் பந்து மெதுவாக வருகிறது என்று கூறி வம்புக்கு சென்றார். அதற்குப் பிறகு தொடர்ந்து சில இன்னிங்ஸ்கள் ஜெய்ஸ்வாலை ஸ்டார்க் ஆட்டம் இழக்க வைத்துக்கொண்டே இருந்தார். இதன் காரணமாக ஜெய்ஸ்வால் இனி அவரிடம் பேசக்கூடாது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவிடம் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவருக்கு பின்னடைவாக மாறிக்கொண்டே வருகிறது. நேற்று அவர் செய்தது கவாஜாவுக்கு பிரச்சினையாக மாறியது. பும்ரா நேற்றைய நாளின் கடைசிப் பந்தில் அவரை வெளியேற்றினார்.
மார்க் வாக் கடுமையான எச்சரிக்கை
இதுகுறித்து மார்க் வாக் கூறும் பொழுது “கவாஜா நேற்று என்ன செய்து கொண்டு இருந்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் நாளை முடிப்பதற்காக கொஞ்சம் தாமதம் செய்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் பொழுது நீங்கள் கான்ஸ்டாஸ் எதற்கு பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டும்? இது தேவையற்ற ஒரு உற்சாகம். இவர் நேற்று பும்ராவிடம் செல்ல வேண்டிய அவசியமே கிடையாது”
இதையும் படிங்க : எங்க பசங்க கிட்ட ஓவரா பண்ணாதீங்க.. அப்படி பண்ணா கடைசியில இது நடக்கும் – ரோகித் சர்மா பேட்டி
“அவர் நாக்கை அடக்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கு நடந்த விஷயத்தில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. இவர் இப்படி தேவையில்லாமல் வம்பில் ஈடுபட்டது கவஜா கவனத்தை சிதறடித்திருக்கலாம். நேற்று அவர் தனது சொந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பும்ராவை அவர் விளையாடி முடித்து இந்த பக்கம் வந்து விட்டார். அத்தோடு அமைதியாக இருந்திருக்க வேண்டும். எப்பொழுதும் பேட்டால் பேச வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






