இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் விராட் கோலி வருகிறாரா?.. பிசிசிஐ செயலாளர் வெளிப்படை பதில்

விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் திரும்ப வருகிறார் என்று செய்திகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய டெஸ்ட் அணி மிகவும் மோசமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய மூத்த நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறந்த பேட்டிங் பார்மில் இருக்கிறார்கள். எனவே இதில் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

விராட் கோலியின் பதிலடி

தற்போது விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டும் விளையாடுவதால், அவர் தொடர்ந்து சீரான ஃபார்மில் இருப்பதற்கு ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து கிடைப்பதில்லை. இதன் காரணமாக விராட் கோலியை ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் வரையில் விளையாட வைப்பது குறித்து பிசிஐ ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார். அவருடைய பேட்டிங் மீண்டும் பழைய விராட் கோலியை நினைவுபடுத்தும் வகையில் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ செயலாளர் பதில்

விராட் கோலி ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வர இருக்கிறார்கள் என்ற செய்தி குறித்து கெவின் பீட்டர்சன், இது ஓரளவுக்கு உண்மை என்றாலும் கூட இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : விராட் கோலிய ரிக்கி பாண்டிங்கே சொல்லிட்டாரு.. அதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை – சுனில் கவாஸ்கர் பாராட்டு

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் கூறும் பொழுது ” விராட் கோலி இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் வருகிறார் என்பது வதந்தி. இதுகுறித்து எங்களுக்கு விராட் கோலி உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. எனவே வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். இப்படி எதுவும் நடக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by