இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் அறிவிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக இவரை இந்த பொறுப்புக்கு கொண்டு வந்ததற்கான காரணங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்த பொறுப்புக்கு தமிழக வீரர் பாலாஜி மற்றும் கர்நாடக வீரர் வினய் குமார் ஆகிய அவரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இந்த நிலையில் எல்லோரது பெயரைத் தாண்டி தற்பொழுது மோர்னே மோர்கல் இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 86 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 117 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகள் விளையாடிய பெரிய அனுபவம் கொண்ட வீரராக இருக்கிறார். மேலும் இவர் விளையாடிய காலத்தில் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதன் வழியாகவும் சிறந்த அனுபவத்தை உள்ளடக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் தற்போது இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் செப்டம்பர் மாதம் முதலில் இருந்தே இணைந்து விடுவார். அங்கு பயிற்சி பெறும் பந்துவீச்சாளர்களை கவனிப்பார். இதற்கு அடுத்து செப்டம்பர் 5ஆம் தேதி ஆரம்பிக்கும் துலீப் டிராபியில் பந்துவீச்சாளர்களை பார்வையிடும் பொறுப்பை செய்வார்.
தற்பொழுது இவர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ தரப்பில் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது ” கிரிக்கெட் ஆலோசனை குழு சிஏசி-யின் முக்கியமான வேலை என்பது, தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கக்கூடியவர்களை நேர்காணல் செய்வது ஆகும். அதே சமயத்தில் துணைப் பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் பொழுது கம்பீர் விருப்பம் முதன்மையாக இருந்தது. ஏனென்றால் அவர் மோர்னே மோர்கள் உடன் இணைந்து லக்னோ அணியில் வேலை செய்திருக்கிறார். மேலும் கம்பீர் அவரை ஒரு பந்துவீச்சாளராக மிக உயர்வாக நினைக்கிறார்.
இதையும் படிங்க : கம்பீர் ரிஷப் பண்ட்ட என்ன நினைக்கிறிங்க.. துலீப் டிராபில கூட அவர் தகுதி இல்லையா? – ஆகாஷ் சோப்ரா கேள்வி
நவம்பர் கடைசி வாரத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு பெரிய தொடர் வரவேற்பதால், தென்னாப்பிரிக்கர் மோர்னே மோர்கலை விட சிறந்த தேர்வு வேறு எதுவும் இருக்க முடியாது. அவர் ஆஸ்திரேலியாவிலும் ஓரளவுக்கு வெற்றி பெற்றவராக இருக்கிறார்.மேலும்இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்தால் போட்டி இங்கிலாந்தில் நடக்கும். எனவே இப்படியான காரணங்களால் மோர்னே மோர்கல் தேர்வு செய்யப்பட்டார்” என்று கூறியிருக்கிறார்.