கம்பீர் ரிஷப் பண்ட்ட என்ன நினைக்கிறிங்க.. துலீப் டிராபில கூட அவர் தகுதி இல்லையா? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

0
24
Rishabh

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்நாட்டு சீசன் சிவப்பு பந்து வடிவத்தில் நடத்தப்படும் துலீப் டிராபியில் இருந்து ஆரம்பிக்கும். இந்த ஆண்டு இந்தத் தொடருக்கான நான்கு அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இருந்து ரிஷப் பண்ட் குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை ஆகாஷ் சோப்ரா கேள்வியாகக் கேட்டிருக்கிறார்.

இந்த முறை துலீப் டிராபிக்கு மண்டலங்களாக ஆறு அணிகளாக பிரிக்கப்படவில்லை. ஏ, பி, சி, டி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் முறையே சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன், ருத்ராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என நான்கு பேர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் ரிஷப் பண்ட்
பி பிரிவில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் விளையாடுகிறார். கில் மற்றும் ருதுராஜ் ஆகியோரை கேப்டனாக தேர்ந்தெடுத்த போதிலும், எதிர்கால இந்திய அணிக்கு கேப்டன் ஆக்கப்படுவார் என்று ஒரு கட்டத்தில் இருந்த ரிஷப் பண்ட் கேப்டனாக கொண்டுவரப்படவில்லை. தற்பொழுது இதை முன் வைத்துதான் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “துலீப் டிராபி அணிக்கு ஆகாஷ் சோப்ரா கேப்டன் ஆக்கப்படவில்லை. அவர் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான அணியில் விளையாடுகிறார்.இதில் ஒன்றும் பெரிய பிரச்சினை கிடையாது. ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு கூட ரிஷப் பண்ட் போட்டியிடவில்லையா? இது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது!

ரிஷப் பண்ட் கேப்டனாக கொண்டுவரப்படாததில் நான் தனிப்பட்ட முறையில் ஒத்துப் போகவில்லை. ஏனென்றால் நீங்கள் பார்த்த வரையில் ரிஷப் பண்டின் சிறந்த அவதாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து என மூன்று நாடுகளில் சதம் அடித்த ஒரே விக்கெட் கீப்பிங் இந்தியா பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மட்டும்தான்.

- Advertisement -

இதையும் படிங்க : 12 அணிகள்.. தொடங்கிய தமிழ்நாட்டு புச்சி பாபு தொடர்.. போட்டிகள் எப்போது எங்கு பார்க்கலாம்.?.. முழு விவரம்

தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தம் உருவாக இருக்கிறது. எனது நான் ரிஷப் பண்ட் பற்றி கம்பீர் என்ன கருத்து வைத்திருக்கிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் முதல் இரண்டு போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடவில்லை. கேஎல்.ராகுல் விளையாட அவர் மூன்றாவது போட்டிக்குதான் வந்தார்” என்று கூறி இருக்கிறார்.