தற்போது விஜய் ஹசாரே டிராபியின் இரண்டாவது சுற்றில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட அதற்கான காரணம் குறித்து வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டில் இந்திய தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் தேசிய அணிக்காக விளையாடாத காலகட்டங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் தங்களது மாநில அணிக்காக விளையாட வேண்டும் என்று கூறியிருந்தது.
தண்டிக்கப்பட்ட வீரர்கள்
இந்த வகையில் இந்த உத்தரவை ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் இருவரும் மீறியதாக சம்பள பட்டியலில் இருந்து பிசிசிஐ இவர்களை அதிரடியாக வெளியேற்றியது. மேலும் இந்திய அணியில் தேர்வு செய்யவும் காலதாமதம் செய்தது. இதில் இறுதியாக இஷான் கிஷான் தற்போதுதான் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் விளையாடி வந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவார்களா என்கின்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் அவர்கள் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு தற்போது வெளியேறி இருக்கிறார்கள்.
பிசிசிஐ உத்தரவு என்ன?
இந்திய ஒருநாள் அணியில் ஒரு வீரர் இடம்பெற வேண்டும் என்றால் அவர் நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபியில் குறைந்தது 2 போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த அடிப்படையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க : 283 ஸ்ட்ரைக் ரேட்.. அடித்த 68 ரன்னில் வைபவ் சூர்யவன்சி செய்த அதிசய சம்பவம்.. தெஆ பரிதாபம்
மேற்கொண்டு விளையாட விரும்பினால் விளையாடி இருக்கலாம். ஆனால் அவர்கள் குறைந்தபட்ச போட்டிகளில் விளையாடி விட்டதால் விஜய் ஹசாரே இரண்டாவது சுற்று போட்டியில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவர்கள் பிசிசிஐ உத்தரவை மீறவில்லை என்றும் தெரிகிறது.






