தற்போது தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் வைபவ் சூரியவன்சி அதிரடியில் மிரட்டி இருக்கிறார்.
தற்போது இந்திய அண்டர் 19 அணி வைபவ் சூரியவன்சி தலைமையில் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அசத்திய இந்திய பவுலர்கள்
முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஜேசன் ரோவல்ஸ் மட்டும் தாக்குப் பிடித்து மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 113 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 114 ரன்கள் எடுத்தார். மற்ற தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
இவருக்கு அடுத்தபடியாக டேனியல் போஸ்மேன் 63 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் கிஷான் குமார் சிங் 4, ஆர்எஸ் அம்பிரிஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். தென் ஆப்பிரிக்க அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வைபவ் சூரியவன்சி மிரட்டல்
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் 19 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் அதிரடியில் பட்டையை கிளப்பிய வைபவ் சூரியவன்சி வெறும் 24 பந்துகளை மட்டும் சந்தித்து 283 ஸ்ட்ரைக்ரேட்டில் 1 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : நான் ஷமி இடத்தில் இருந்தால் இதைத்தான் செய்வேன்.. இதை விடவே கூடாது – இர்பான் பதான் பேச்சு
வைபவ் சூரியவன் சி எடுத்த 68 ரண்களில் பவுண்டரி சிக்ஸர் மூலம் மட்டுமே 64 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 95 சதவீதத்திற்கு மேல் இந்த வகையில் அவர் ரன்கள் எடுத்தது ஆச்சரியமான விஷயம். மேலும் தற்போது இந்திய அணி வெறும் 12 ஓவர்களில் 120 ரன்கள் தாண்டி எடுத்திருக்கும் நிலையில், மின்னல் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.






