ஆஸி பயிற்சி போட்டி.. ஜெயித்த பின்னும் ஆடிய இந்திய அணி.. காரணம் என்ன? – வெளியான தகவல்கள்

0
328
ICT

இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக இலக்கை எட்டி வென்ற பின்பும் போட்டியை முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து விளையாடுவதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு நாட்கள் கொண்ட பகல் இரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நேற்று மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளில் ஒருநாள் கிரிக்கெட் போல அணிக்கு தலா 46 ஓவர்கள் என்ற முறையில் போட்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வது என முடிவு செய்தார்.

- Advertisement -

திடீர் அதிரடியில் இறங்கிய சாம் கான்ஸ்டாஸ்

ஆஸ்திரேலியா அணி மிகவும் மெதுவாக ஆரம்பிக்க ஆரம்பத்தில் பொறுமை காட்டிய அந்த அணியின் 19 வயதான இளம் துவக்க ஆட்டக்காரர் சாங் கான்ஸ்டாஸ் திடீரென அதிரடியில் ஈடுபட்டு 97 பந்துகளில் 17 ரன்கள் குவித்தார். இறுதியாக அந்த அணி 43.2 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஹர்ஷித் ராணா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 42.4 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய் ஸ்வால் 45, கில் 50 மற்றும் நிதீஷ் குமார் 42 ரன்கள் எடுத்தார்கள். இந்த நிலையில் 43 வது ஓவரிலேயே இந்திய அணி இலக்க எட்டி வெற்றி பெற்றுவிட்டாலும் கூட தொடர்ந்து 46 ஓவர்களும் பேட்டிங் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகம் காட்டிய கறார்

அடுத்து நடைபெற இருக்கும் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கான இந்த பயிற்சி போட்டியின் ஒருநாள் மழையால் வீணாகி விட்ட காரணத்தினால், இந்திய அணி நிர்வாகம் மேற்கொண்டு இருந்த மூன்று ஓவர்களையும் வீணடிக்க விரும்பவில்லை. எனவே இலக்கை எட்டிய பிறகும் தொடர்ந்து மூன்று ஓவர்களை ஆஸ்திரேலியா அணியை வீசவைத்து பயிற்சியாக எடுத்துக் கொண்டு விளையாடியது.

இதையும் படிங்க : ராணா 6 பந்தில் 4 விக்கெட்.. கில் ஜெய்ஸ்வால் நிதிஷ் கலக்கல்.. இந்தியா ஆஸி அணியை பயிற்சி போட்டியில் வென்றது

இந்திய அணி இரவில் பேட்டிங் செய்த காரணத்தினால், அப்போது களத்தில் வாஷிங்டன் சுந்தர் இருந்ததாலும், இது முக்கியமான கட்டம் என்பதால் கூடுதல் ஓவரை சந்தித்து விளையாடும் படி அறிவுறுத்தப்பட்டது. ஏனென்றால் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் மூன்றாவது செஷன் இரவில் விளையாடுவது கடினமானது. எனவே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இன்று கணக்குப்படி மூன்றாவது செஷன் விளையாடியது போலவே இரண்டாவதாக பேட்டிங் செய்து விளையாடினார்கள். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிகிறது!

- Advertisement -