பிரிவிஸ்-ஜடேஜா செய்த பெரிய தப்பு.. அம்பயர் அப்பீலை ஏற்காத உண்மை காரணம் இதுதான்.. இப்படி செய்யலாமா?

0
2420
Brevis

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக வெல்லக் கூடிய நிலையில் இருந்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பிரிவியஸ் மற்றும் ஜடேஜா செய்த ஒரு பெரிய தவறு அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியிருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி சிறப்பாக போராடியது. ஆனால் இறுதியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் தோல்வியடைந்தது.

- Advertisement -

எல்பிடபுள்யு டெட்-பால் என்றால் என்ன?

ஒரு பந்துவீச்சாளருக்கு நடுவர் எல்பிடபிள்யு கொடுத்துவிட்ட பிறகு, அந்த பந்து உடனே டெட்-பால் ஆகிவிடும். அந்த பந்து அந்த நேரத்தில் பவுண்டரி சென்றாலோ, இல்லை பேட்ஸ்மேன் ஓடி ரன்கள் எடுத்தாலும் எதுவுமே கணக்கில் வராது. இதற்கு அடுத்து பேட்ஸ்மேன் ரிவ்யூ மட்டுமே செய்ய முடியும்.

அதே சமயத்தில் நடுவர் ஒரு பேட்ஸ்மேனுக்கு எல்பிடபிள்யு தராமல் எதிரணி கேப்டன் எல்பிடபிள்யு அப்பீல் செய்யும் பொழுது, அந்தப் பந்து டெட்-பால் ஆகாது. அப்பொழுது பந்து எங்காவது பட்டு பவுண்டரிக்கு போனாலும், பேட்ஸ்மேன் ஓடி ரன்கள் எடுத்தாலும் ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

- Advertisement -

பிரிவிஸ் ஜடேஜா செய்த பெரிய தவறு

இந்த போட்டியில் லுங்கி நிகிடி வீசிய 17ஆவது ஓவரில் இரண்டாவது பந்தில் சிறப்பாக விளையாடிய ஆயுஸ் மத்ரே ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த பந்தை சந்திப்பதற்கு டிவால்ட் பிரிவிஸ் களம் இறங்கினார். புல் டாஸ் ஆக வீசப்பட்ட பந்து பிரிவிஸ் காலில் பட்டது. இதற்கு எல்பிடபிள்யு எதிரணி கேட்க நடுவர் அவுட் கொடுத்தார். இந்த இடத்தில் பந்து உடனே டெ-ட்பால் ஆகிவிட்டது.

இப்படியான நிலையில் சீனியரான ஜடேஜாவும் ஜூனியரான பிரிவிசும் உடனடியாக ரிவ்யூ செய்யாமல், பந்து டெட்பால் ஆகிவிட்ட நிலையில் தேவையில்லாமல் இரண்டு ரன்கள் ஓடினார்கள். இதற்கு அடுத்து சிறிது நேரம் ஆலோசனை செய்துவிட்டு ரிவ்யூ செய்தார்கள்.

இதையும் படிங்க : சிஎஸ்கே தோல்விக்கு பழிய நான் ஏத்துக்கிறேன்.. இந்த முடிவோட போனேன் ஆனா செய்ய முடியல – தோனி பேச்சு

இப்பொழுது ரிவ்யூ செய்ய அனுமதிக்கப்பட்ட 15 செகண்ட் முடிந்துவிட்டது. இதன் காரணமாக நடுவர் ரிவ்யூவை ஏற்கவில்லை. இதனால் பரிதாபமாக பிரிவிஸ் வெளியேறினார். பல லீக்குகளில் விளையாடும் இளம் வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடும் ஜடேஜா இருவரும் சாதாரண விதியை புரிந்து கொள்ளாமல் களத்தில் செயல்பட்டதை சிஎஸ்கே ரசிகர்களே தற்பொழுது விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -