இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் மும்பை மாநில அணியில் இருந்து விலகி கோவா மாநில அணிக்கு விளையாட இருப்பதற்கான காரணங்கள் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மும்பை மாநில அணிக்காக சிறப்பான முறையில் விளையாடிய பலரது கவனத்தையும் கவர்ந்து இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் தேர்வானார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை அணி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் அவர் அந்த அணியை விட்டு விலகுவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
2022 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்
இந்த ஆண்டில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை மற்றும் ஆந்திர அணிகள் மோதி கொண்ட பொழுது, ஜெய் ஸ்வால் ஆந்திர கேப்டன் ரவி தேஜாவிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டார். இதனால் களத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக சில ஓவர்கள் ஜெய்ஸ்வாலை கேப்டன் ரகானே வெளியில் வைத்தார்.
இந்த நேரத்தில் இந்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. சொந்த அணி வீரரையே தண்டிக்கும் விதமாக வெளியில் வைத்த கேப்டன் ரகானே குறித்து பலரும் பாராட்டுகள் தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் ரகானே குறித்து தனக்கு எந்த கோபமும் இல்லை எனவும் தன்னுடைய கேப்டன் நடந்து கொண்டது சரிதான் எனவும் ஜெய்ஸ்வால் பேசியிருந்தார்.
இந்த ஆண்டு நடந்த சம்பவம்
இந்த ஆண்டு ரஞ்சி தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணிக்கு விளையாடிய ஜெய்ஸ்வால் பொறுப்பற்ற முறையில் விளையாடிய ஆட்டம் இழந்தார். அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் அணியிடம் மும்பை அணி தோல்வி அடைந்தது. ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்த முறை குறித்து மும்பை மாநில அணியில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மும்பை அணியில் பிரச்சனை.. ஜாகீர் கானிடம் உண்மையை உடைத்த ரோகித் சர்மா.. வெளியான வீடியோவால் பரபரப்பு
தன்னிடம் இப்படியான விசாரணை நடத்தப்பட்டது குறித்து ஜெய்ஸ்வால் கடுமையான அதிருப்தி அடைந்ததாகவும், அந்த நேரத்தில் டிரெஸ்ஸிங் ரூமில் ரகானே கிட் பேக்கை ஜெய்ஸ்வால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக இருவருக்கும் இடையே உரசல்கள் இருந்திருக்கின்றன. இதனால்தான் ஜெய்ஸ்வால் மும்பை அணியை விட்டு வெளியேறுகிறார் என்று கூறப்படுகிறது.






