மும்பை அணியில் பிரச்சனை.. ஜாகீர் கானிடம் உண்மையை உடைத்த ரோகித் சர்மா.. வெளியான வீடியோவால் பரபரப்பு

0
332
Rohit

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக லக்னோ அணியின் மென்டர் ஜாகிர் கான் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் பேசிக் கொண்டிருந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியை வென்றிருக்கிறது. இதே போல மும்பை இந்தியன்ஸ் அணியும் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியை வென்று இருக்கிறது. ஒரே நிலையில் இரண்டு அணிகளும் இருப்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமானதாக அமைகிறது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிரச்சனை நீடிக்கிறதா?

கடந்த ஆண்டு திடீரென குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழைத்து வந்ததோடு, அந்த அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவையே புதிய கேப்டனாகவும் நியமித்ததை தொடர்ந்து அந்த அணிக்குள் ஒற்றுமையில்லாமல் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு சிறந்த அணி கிடைத்த போதும் மும்பை இந்தியன்ஸ் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. மேலும் இந்த ஆண்டு அதைவிட சிறந்த அணி கிடைத்த போதிலும் கூட முதல் இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி பரிதாபமாக தோற்றது. மொத்தமாக அந்த அணி விளையாடி உள்ள மூன்று போட்டிகளிலும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

Lரோஹித் சர்மா பேசியது என்ன?

இந்த நிலையில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று லக்னோ ஏகனா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்த ஜாகிர் கானிடம் ரோஹித் சர்மா நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : ரகானே புலம்பலால் வந்த நேற்றைய வெற்றி.. ஐபிஎல் விதிப்படி சரியா?.. ரசிகர்கள் சரமாரி கேள்வி

இந்த வீடியோவில் ரோஹித் சர்மா ஜாகிர் கானிடம் “எதைச் செய்ய வேண்டுமோ அதை நான் சரியாகச் செய்தேன். இப்போது நான் எதையும் செய்யத் தேவையில்லை” என்று கூறுவது பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டிருந்ததாக செய்திகள் பரவுகிறது. கடந்த ஆண்டு அபிஷேக் நாயரிடம் இதே போல் பேசிய ஒரு வீடியோ சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோவும் அதே வகையில் சர்ச்சையாக மாறிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -