ஐபிஎல் 2024

டி20யில் 100வது விக்கெட்.. பர்பிள் கேப்.. அசத்தும் நடராஜன்.. ஆனால் டி20 உகோ-ல் வாய்ப்பில்லை

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக தங்கள் சொந்த மைதானத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் இரண்டு விக்கெட் கைப்பற்றியதின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களுக்கான பர்பிள் தொப்பி நடராஜன் வசம் வந்திருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டி 42 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் கிளாஸ் அதிரடியாக 19 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அந்த அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதும் இவர்களது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்து இருவரும் அரை சதம் அடித்தார்கள். மேலும் 134 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

இந்த பார்ட்னர்ஷிப்பை ஜெய்ஸ்வால் விக்கெட்டை கைப்பற்றி தமிழக வீரர் நடராஜன் முடித்து வைத்தார். அவர் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து கடைசி ஓவரை வீசிய நடராஜன் ஹெட்மையர் விக்கெட்டை கைப்பற்றினார் கைப்பற்றினார். இந்த இடத்தில் ஆட்டம் மாறியது. இன்று நடராஜன் நான்கு ஓவர்களில் 39 ரன்களுக்கு இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் வீசிய புவனேஸ்வர் குமார் மிகச் சிறப்பாக பந்துவீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, பரபரப்பான போட்டியில் ஹைதராபாத் அணிக்கு ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை தேடித் தந்தார்.

இதையும் படிங்க : சூப்பர் ஓவர் போகலாம்னு நினைச்சேன்.. புவி மட்டுமல்ல நடராஜனும் செம பவுலர் – பாட் கம்மின்ஸ் பேச்சு

இந்த போட்டியில் இரண்டு விக்கெட் கைப்பற்றியதன் மூலம் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 89 இன்னிங்ஸ்களில் நடராஜன் 100 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் எட்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் தொப்பையை கைப்பற்றி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் பும்ரா 10 போட்டியில் 14 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்பான பவுலிங் ஃபார்மில் இருக்கும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் இடம் கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்க கூடியதாக இருக்கிறது

Published by