டி20 உலகக் கோப்பை 2024

இந்தியா வேற லெவல் டீம்.. ஆனா ஆஸிக்கு இருக்கும் இந்த வசதி கிடையாது.. அதான் தோக்கறாங்க – மிஸ்பா உல் ஹக் பேட்டி

இந்தியாவில் 17 வது ஐபிஎல் சீசன் மிக வேகமாக இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. இதற்கு அடுத்து உடனே ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. தற்பொழுது இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே பிரிவில் இடம் பெற்று இருக்கின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஜூன் 5-ம் தேதி சந்திக்கிறது. இதற்கு அடுத்து ஜூன் 8-ம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதுகிறது.

கடந்த ஆண்டில் ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் என இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் இந்த வருடத்தில் மேற்கொண்டு ஒரு வாய்ப்பு அமையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த போட்டி குறித்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எதிர்பார்ப்புகள் கூடிக் கொண்டு வருகிறது.

இது குறித்து மிஸ்பா உல் ஹக் பேசும் பொழுது ” இந்தியா இப்பொழுது மிகவும் வித்தியாசமான அணி. அவர்கள் முன்பு எப்பொழுதும் பேட்டிங்கில் வலுவாக இருந்து வருவார்கள். ஆனால் தற்பொழுது அவர்களுக்கு நல்ல பந்துவீச்சு வரிசையும் கிடைத்திருக்கிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா, சமி, சிராஜ் கூட்டணி அவர்களுடைய தரத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற ஆசிரிய கிரிக்கெட் நாடுகள் அதிகப்படியான மக்கள் தொகையின் காரணமாக அதிகப்படியான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இப்படியான அழுத்தம் செயல் திறனை கொஞ்சம் பாதிக்கும். இந்தியா பெரிய போட்டிகளில் பெரிய அளவில் செயல்பட முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.

இதையும் படிங்க : எல்லா சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து நடிச்சா படம் ஓடிடுமா?.. ரோகித் இஷான் என்ன செஞ்சாங்க – சேவாக் விமர்சனம்

ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இது ஒரு முக்கிய பிரச்சினையாக அமைகிறது. எதிர்காலத்தில் இந்த ஆசிய அணிகள் இதை எப்படி சமாளிக்கும் என்பது சுவாரசியமானது. குறிப்பாக இந்திய அணி அடுத்தடுத்து வரும் பெரிய தொடர்களில் வெல்ல வேண்டும் என்றால், இந்த அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்” என கூறி இருக்கிறார்.

Published by