“டிரஸ்ஸிங் ரூமில் பிரதமர்.. பிளேயர்ஸ் என்ன நினைச்சிருப்பாங்கனு நல்லா தெரியும்!” – ரவி சாஸ்திரி அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
4479
Rohit

இந்திய அணி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி தோற்றது.

உள்நாட்டில் தொடர் நடைபெற்ற காரணத்தினாலும், இந்திய அணி ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த காரணத்தினாலும், தோல்வியே அடையாமல் இறுதிப்போட்டியை எட்டியதாலும், ரசிகர்களும் மற்றும் பலரும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்றும் பலமாக நம்பி இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் கடினமாக இருக்கவும், பந்து வீசும் பொழுது ஆடுகளம் மறுபடியும் கடினமாக மாறவும், ஆஸ்திரேலியா அணியை இறுதி போட்டியில் எதுவும் செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இது இந்திய அணி வீரர்களை மைதானத்திலேயே பெரிய அளவில் உடைந்து போக செய்துவிட்டது. முகமது சிராஜ் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். மேலும் கேப்டன் ரோஹித் சர்மாவும் கண்கலங்க நின்றிருந்தார். விராட் கோலியின் ஏமாற்றம் அடைந்த முகத்தை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. இப்படி ஒட்டுமொத்த இந்திய அணியே மனதளவில் உடைந்து இருந்தது.

இந்த நேரத்தில் வீரர்களின் அறைக்குச் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்திய வீரர்களுக்கு நம்பிக்கைக் கூறும் விதமாக அனைவருடனும் சில வார்த்தைகள் பேசி தேற்றினார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடுத்த நாள் வெளிவந்தது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ரவி சாஸ்திரி கூறும் பொழுது “ஒரு ட்ரெஸ்ஸிங் ரூம் எப்படி இருக்கும் என்று நான் அறிந்திருப்பதாலும், இந்திய அணிக்கு பல காலம் நான் விளையாடி உள்ளேன் என்பதும், மேலும் இதே இந்திய அணிக்கு நான் ஏழு ஆண்டு காலம் பயிற்சியாளராக இருந்திருக்கிறேன் என்பதாலும், பிரதமர் அவர்கள் அங்கு சென்று வீரர்களிடம் பேசியது சிறப்பான விஷயம் என்று நான் நினைக்கிறேன். மனதளவில் கீழே இருக்கும் பொழுது இது நம்மை அதை விட்டு வெளியே வர உதவுகிறது.

நாட்டின் பிரதமர் போன்ற ஒரு பெரிய மனிதர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றால், அது மிகப் பெரிய விஷயம். ஏனெனில் அது வீரர்களின் உற்சாகத்தை உயர்த்தும். ஒரு சாதாரண மனிதராக இல்லாமல் நாட்டின் மிகப்பெரிய மனிதர் அங்கு செல்வது சிறப்புக்குரிய ஒன்று. நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருப்பதால், அவர் அங்கு சென்ற பொழுது நமது வீரர்கள் எவ்வளவு சிறப்பாக உணர்ந்து இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்!” என்று கூறியிருக்கிறார்!