இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய தார் ரோடு போலான அதே அடையாளத்தை மீண்டும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பயன்படுத்த இருக்கிறது
பாகிஸ்தான் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய மிக அதிகபட்ச சாதகத்தை கொடுக்கக்கூடிய தார் ரோடு போலான ஆடுகளங்களை பயன்படுத்துகிறது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்க முயற்சிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபடுவதாக வெளியில் இருந்து கடுமையான விமர்சனங்கள் வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முல்தான் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு மூன்று வீரர்கள் சதம் அடித்து இருந்தார்கள்.
இப்படியான நிலையில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவித்து பிரமிப்பை ஏற்படுத்தியது. அந்த அணிக்கு ஜோ ரூட் இரட்டை சதமும், ஹாரி புரூக் முச்சதமும் அடித்து இருந்தார்கள். மேலும் இரண்டாவது இன்னிங்சில் மோசமாக விளையாடி பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் டெஸ்ட் போட்டி நடந்த முல்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய அதே ஆடுகளத்தை இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் தயார் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பயன்படுத்துகிறது.
இதையும் படிங்க : கம்பீர் சூர்யாவுக்கு.. இந்த விஷயத்தில் நிதிஷ் குமார் நன்றியோட இருக்கணும்.. காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு
முதல் டெஸ்ட் போட்டியில் வந்து வீச்சாளர்களின் கால் தடங்கள் மற்றும் ஆடுகளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்கள் தண்ணீர் பாய்ச்சி சரிசெய்யப்படுகிறது. மேலும் இந்த ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக தயார் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஐசிசி விதிமுறை ஒரே மைதானத்தில் ஒரே ஆடுகளத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதை தடுப்பதில்லை. மாறாத மைதானத்தின் வெளிப்புறம் விளையாடுவதற்கு தகுதியாக இருப்பதை மட்டுமே பார்க்கிறது. இருந்த போதிலும் அதே ஆடுகளத்தை மீண்டும் பயன்படுத்துவது சர்ச்சையாக மாறியிருக்கிறது.