கம்பீர் சூர்யாவுக்கு.. இந்த விஷயத்தில் நிதிஷ் குமார் நன்றியோட இருக்கணும்.. காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
15
Nitish

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தனக்கு செய்த ஒரு காரியத்திற்கு நிதிஷ் குமார் நன்றியுடன் இருக்க வேண்டுமென ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை எதிர்கால வீரர்களை கண்டறிவதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது.

- Advertisement -

நிதிஷ் குமாருக்கு நடந்த எதிர்பாராதது

இந்திய அணியில் ரியான் பராக், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் எப்படி விளையாடுவார்கள் என்பதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தேவையான அளவுக்கு பார்த்து இருக்கிறது. ஆனால் நிதிஷ்குமார் எப்படி விளையாடுவார் என்பதை பார்க்கவில்லை என்பதால், அவரை பரிசோதிக்க தயாராக இருந்தார்கள்.

இந்த நிலையில் சீனியர் பேட்ஸ்மேன்கள் இருந்த பொழுதும் கம்பீர் வழிகாட்டுதலில் நிதிஷ் குமார் பேட்டிங்கில் நான்காவது இடத்திற்கு அனுப்பப்பட்டார். ரியான் பராக் அந்த இடத்தில் விளையாடி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அணி நிர்வாகம் தொலைநோக்காக யோசித்தது.

- Advertisement -

நிதிஷ் குமார் நன்றி உடன் இருக்க வேண்டும்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நிதிஷ் குமாரை இந்த தொடரில் எப்படியாவது நிலை நிறுத்த வேண்டும் என்பது இந்திய அணி நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது. அவர்கள் இப்படி நினைத்ததற்காக நிதிஷ் குமார் அவர்களுக்கு நன்றி உடன் இருக்க வேண்டும். பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தை அவ்வளவு எளிதாக பெற முடியாது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா ரிங்கு சிங் மற்றும் ரியான் போன்றவர்கள் இருந்தும் அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது”

இதையும் படிங்க : இந்திய அணியை காயம் கூட பாதிக்காது.. பழைய மேட்ச் வீடியோவை அதுக்காக பாக்கறேன் – நியூசி கோச் பேட்டி

“இருந்தபோதிலும் நிதிஷ் குமாரை அவர்கள் விளையாட சொன்னார்கள். அவர் போட்டியில் பேட்டிங் செய்த விதம் மற்றும் ஆட்டநாயகன் விருது பெற்றது என அருமையாக செயல்பட்டார். மேற்கொண்டு சஞ்சு சாம்சன் மற்றும் நிதிஷ் குமார் இருவரும் ஒரே மாதிரியானவர்கள். அவர்கள் இருவராலும் நின்ற இடத்தில் இருந்து சிக்சர் அடிக்க முடிகின்ற பேலன்ஸ் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -