இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரின் முக்கியத்துவம் பற்றியும், இதிலிருந்து வெளிவந்த மூன்று இந்திய இளம் வீரர்கள் பற்றியும், இந்திய மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நாளை ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் மூலம் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி நடைபெற இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றம்
ஐபிஎல் தொடரின் வருகைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய நன்மைகள் நடந்திருக்கிறது. ஐபிஎல் அணிகள் வலைவீசி தேடிய சில இளம் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் தங்கள் திறமையை காட்ட, நேரடியாக அவர்கள் இந்திய தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, பும்ரா என தொடங்கி தற்போது ரிங்கு சிங், நிதீஷ் குமார் ரெட்டி என ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் தந்த வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் எப்படியானது என்றும், இதிலிருந்து வெளியில் தெரிந்த மூன்று வீரர்கள் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றும் சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.
இந்த மூன்று வீரர்களுக்கு நான் ஃபேன்
இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது “பல வீரர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்தியா உலகக்கோப்பை சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை வென்று கொண்டு வருகிறது. மேலும் இங்கு இளம் வீரர்கள் கேப்டனாக உயர்ந்து பின்பு இந்திய அணியிலும் சாதித்து இருக்கிறார்கள். மேலும் இந்த தொடரில் இருந்து வெளிவந்திருக்கும் வேக்ப்பந்துவீச்சாளர்களையும் பாருங்கள்”
இதையும் படிங்க : சிஎஸ்கேவின் வெற்றி பார்முலா இதுதான். 2 வேலைய செய்யுற ஆள தேடுறாங்க – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
“இன்று எங்களிடம் உற்சாகமான இளம் தலைமுறை வீரர்கள் இருக்கிறார்கள். ரிங்கு சிங், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் என இந்த மூன்று இளம் வீரர்களுக்கும் நான் பெரிய ரசிகன். மேலும் இந்த தொடரில் தற்போது அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். நீங்கள் இங்கு உங்கள் திறமையை வளர்த்து சீசனுக்கு 500 ரன்கள் எடுத்தால் பெரிய வீரராக மாற முடியும். உங்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும். ஐபிஎல் தொடரில் வீரர்களின் முக்கிய அம்சம் வீரர்களின் மனோபலம்தான். முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்படுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






