கங்குலிக்கு இடமில்லை.. இடது கை வீரர்களின் ஆல் டைம் ODI லெவன்.. வாசிம் ஜாபர் தேர்வு.. 2 இந்திய பிளேயர்கள் இடம்பிடிப்பு

0
393

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாஃபர் அனைவரும் கவனிக்கத்தக்கவிதமாக கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இடது கை ஆட்டக்காரர்களாக தேர்வு செய்து சிறந்த இடது கை ஆல் டைம் பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கிறார்.

இதில் கவனிக்கத்தக்க விதமாக இந்தியாவின் ஜாம்பவான் வீரரான சௌரவ் கங்குலியின் பெயரிடம் பெறவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

கிரிக்கெட்டின் நுண்ணறிவுக்கு பெயர் பெற்ற வீரரான இந்தியாவின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் அவ்வப்போது ஏதேனும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை செய்து கவனத்தை ஈர்ப்பார். அதுபோலவே தற்போது கிரிக்கெட் உலகில் சாதனை படைத்த இடது கை ஆட்டக்காரர்களாக தேர்வு செய்து தனது சிறந்த ஆல் டைம் ஒருநாள் பிளேயிங் லெவனை தேர்வு செய்திருக்கிறார். இது தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

அவரது சிறந்த இடது கை ஒரு நாள் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் மற்றும் இலங்கை அணியின் ஜெயசூர்யா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். மேலும் மூன்றாவது வீரராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா இடம்பெற்று இருக்கிறார். இவர்கள் மூவருமே அவர்களது சொந்த நாட்டிற்காக செய்த சாதனைகள் ஏராளம்.

மிடில் வரிசையில் நான்காவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பிரைன் லாராவும், ஐந்தாவது வரிசையில் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கும் இடம் பெற்றிருக்கின்றனர். ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஐந்தாவது வரிசையில் யுவராஜ் சிங் ஆறாவது வரிசையில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன், ஏழாவது வரிசையில் தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த லான்ஸ் க்லூஸ்னர் இடம்பெற்று இருக்கின்றனர்.

- Advertisement -

பந்துவீச்சாளர்களின் தர வரிசையில் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம், இந்தியாவை சேர்ந்த ஜாகீர் கான், ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் அடங்கிய அணியை வெளியிட்டு இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்கவிதமாக இந்தியாவைச் சேர்ந்த சௌரவ் கங்குலியின் பெயர் இடம் பெறாதது அனைவரிடையே ஆச்சரியத்தையும், கவனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க:13 வருடம்.. தமிழ்நாட்டை விட்டு கேரளா அணிக்கு சென்ற பாபா அபராஜித்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் முடிவு.. காரணம் என்ன.?

வாஷிம் ஜாபர் வெளியிட்ட சிறந்த இடது கை ஒரு நாள் அணி : மேத்யூ ஹைடன், ஜெயசூர்யா, குமார் சங்கக்கார பிரைன் லாரா, யுவராஜ் சிங், மைக்கேல் பெவன், லான்ஸ் க்லூஸ்னர், வாசிம் அக்ரம், ஜாகிர் கான், மிட்சல் ஸ்டார்க், குல்தீப் யாதவ்.