இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலியை பங்களாதேஷ் அவுட் செய்வதற்கு கொண்டு வந்த திட்டம் குறித்து பங்களாதேஷ் முன்னாள் வீரர் தமிம் இக்பால் வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
விராட் கோலி இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட திட்டத்தில் தனிப்பட்ட குடும்ப காரணத்திற்காக கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக நீண்ட நாட்கள் கழித்து அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தற்போது பங்களாதேஷ் தொடருக்கு திரும்பி இருக்கிறார்.
விராட் கோலி அவுட் ஆன விதம்
இன்றைய போட்டியில் விராட் கோலி வெளியே வீசப்பட்ட பந்தை கவர் டிரைவர் விளையாட சென்று விக்கெட் கீப்பர் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். பந்தை விளையாடாமல் விட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும் கூட தேடி சென்று விராட் கோலி விளையாடுவது அவருடைய பலவீனமாக பல வருடங்களாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் விராட் கோலி நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி வருவதும், அதே சமயத்தில் அவருடைய பலவீனத்தையும் ஒரு சேர பயன்படுத்தி திட்டமிட்டு பங்களாதேஷ் விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றியது. இந்த திட்டம் குறித்து பங்களாதேஷ் முன்னாள் வீரர் தமிம் இக்பால் பாராட்டி இருக்கிறார்.
எங்க அனலைசர் மேஜிசியன் போல வேலை செய்தார்
இந்த போட்டியில் விராட் கோலி வெளியேற்றப்பட்ட விதம் குறித்து பேசி இருக்கும் தமிம் இக்பால் கூறும்பொழுது “விராட் கோலி சிறிது காலம் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வருகிறார். இதனால் பந்து எப்படி வருகிறது என்பதை உணர்ந்து கட்டமைக்க அவர் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. இது அனைவருக்கும் நடக்கும் ஒரு விஷயமாகும். நாங்கள் அனைவருமே இந்த விளையாட்டை விளையாடி உள்ளதால் எங்களுக்கு இது தெரியும்”
இதையும் படிங்க : இந்திய மண்ணில் யாரும் செய்யாத சாதனை.. ஹசன் மக்முத் வேற லெவல் சம்பவம்.. கில் மோசமான ரெக்கார்ட்
“சில நேரங்களில் நீங்கள் பந்தை உணர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் விராட் கோலி இதே மாதிரியான பந்தில் பலமுறை வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு சரியான டிஸ்மிஸ் ஆகும். இதன் காரணமாக எங்களுடைய அனலைசர் ஒரு மேஜிசியன் போல வேலை செய்திருக்கிறார். இது நிச்சயமாக மிகவும் திட்டமிடப்பட்ட பந்து வீச்சு” என்று கூறி இருக்கிறார்