இந்திய தொடர்.. வலிமையான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் முதல் டெஸ்டில் விலகல்

0
2112

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நிலையில் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாட உள்ள டெஸ்ட் கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

கேன் வில்லியம்சன் விலகல்

இந்திய அணிக்கு இந்த வருடத்தில் நீண்ட நெடிய டெஸ்ட் தொடர் உள்ளது. சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி அதற்குப் பிறகு தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது. அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இதற்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகிய டிம் சவுதி அணியில் ஒரு வீரராக தொடரும் பட்சத்தில் தற்போது நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக டாம் லதாம் பொறுப்பேற்று இருக்கிறார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் சிறிய காயத்தால் அவதிப்பட்ட நிலையில் அவர் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

கை கொடுக்கும் ஐபிஎல் அனுபவம்

எனவே அவருக்கு பதிலாக மைக்கேல் பிராஸ்வெல் முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஐபிஎல் தொடரில் கலக்கிய டெவான் கான்வே, ரச்சன் ரவீந்திரா, டேரில் மிச்சல், சான்ட்னர் ஆகியோர் இந்தத் தொடரில் இடம் பிடித்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இவர்களுக்கு டெஸ்ட் தொடரில் நன்றாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மூத்த வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி முக்கிய பங்காற்றுவார் எனவும் எதிர்பார்க்கலாம்.

கேன் வில்லியம்சனுக்கு பதிலாக பெங்களூருவில் நடைபெற உள்ள முதல் டெஸ்டில் களமிறங்க உள்ள மைக்கேல் பிரேஸ்வெல் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 254 ரன்கள், 24 விக்கெட்டுகளும் நியூசிலாந்து அணிக்காக வீழ்த்திய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் களமிறங்குவதால் இந்திய அணியும் சிறந்த அணியோடு களமிறங்கும்.

இதையும் படிங்க:எனக்கு கேப்டனா இந்த மாதிரி இருக்கிறது புடிக்கல.. அவர் ஆடுன மாதிரி விளையாட ஆசைப்படுறோம் – சூரியகுமார் பேட்டி

இந்திய டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி :

டாம் லாதம் (கேப் ), டாம் ப்ளூன்டெல் (விகீ), மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, மாட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (2வது மற்றும் 3வது டெஸ்ட் மட்டும்), டிம் சவுத்தி, கேன் வில்லியம்சன், வில் யங்

- Advertisement -